இன்பெஃர்னோவின் அலை இங்கு இன்னமும் ஓயவில்லை. இங்கு புத்தகக் கடைகளில் ஒரு பகுதியில் சின்ன குன்று போல இன்பெஃர்னோ அடுக்கப்பட்டிரு க்கின்றது. அவ்வளவு வரவேற்பு இன்னமும் இந்த நூலுக்கு இருக்கின்றது.
இன்று மேலும் ஒரு சித்திரத்தை அறிமுகப்படுத்துகின்றேன். இது ஒரு வரைபடம். பெயரே அச்சமூட்டும் வகையில் இருக்கும் ஒரு வரை படம்.:-)
Mappa dell' Inferno (இத்தாலி) - ஆங்கிலத்தில் Map of Hell, அதாவது தமிழில் நரகத்தின் வரைபடம்.
முழு படம்
கீழே இருப்பது அம்முழு படத்தின் பெரிதாக்கப்பட்ட ஒரு சிறு பகுதி.
டாண்டேயின் டிவைன் கோமெடியின் ஒரு அத்தியாயத்தை விளக்கும் வகையில் போத்திசெல்லி (Sandro Botticelli) என்ற சித்திரக் கலைஞர் 1480-1490 கால வாக்கில் தீட்டிய சித்திரம் இது.
போத்திசெல்லி டாண்டேயின் காவியத்தில் முழுமையாக தன்னை இழந்து இந்த ஓவியத்தை வரைந்ததாக வஸாரி தனது பையோக்ராபியில் குறிப்பிடுகின்றார். தனக்கு அளிக்கப்பட்ட பணியை முடித்து ப்ளோரன்ஸ் திரும்பியவுடன் பல காலங்களை இந்த ஓவியம் வரைவதிலேயே போத்திசெல்லி செல்வழித்தார் என்பது போல இக்குறிப்பு வருகின்றது. (The lives of the Artist - Vasari 1550)
இன்பெஃர்னோவில் 58ம் அத்தியாயத்தில் ஸோப்ரிஸ்ட் இந்த வரைபடத்தை மாற்றி அந்த பெரிய அறிஞர்களின் வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டமையை ரோபர்ட் குறிப்பிடுவது போல டான் ப்ரவ்ன் குறிப்பிடுகின்றார். இது சியென்னாவுக்கு சொல்வது போல வருகின்றது. ரோபர்ட்டை விட சியன்னாவுக்கு ஸோப்ரிஸ்டை நன்கு தெரியும் என்பது அப்போது ரோபர்ட்டிற்குத் தெரியாது. :-)
இந்த கலைப்படைப்பு மிகப் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட ஒன்று. இப்போது பார்க்கக் கிடைப்பவை 92 பகுதிகளாக இருக்கின்றன. அதில் 7 பகுதிகள் வாட்டிக்கனின் வாட்டிக்கன் நூலகத்தில் உள்ளன. ஏனைய 85 பகுதிகள் ஜெர்மனியின் பெர்லின் நகரில் உள்ள Kupferstichkabinett (Museum of Prints and Drawings) கலை ஓவிய அருங்காட்சியகத்தில் இருக்கின்றன.
ஏனைய சில கலைஞர்கள் டாண்டேயின் இந்த நரகத்தின் வரைபடத்தை ஓவியமாக வரைந்திருந்தாலும் போத்திசெல்லியின் இந்த கலைப்படைப்பே மிக நுணுக்கமான முறையில் இதனை விளக்குவது. ஒன்பது படி நிலைகளில் வெவ்வேறு விதமான பாவங்களைச் செய்தவர்களுக்கு ஒரு தளம் என்ற வகையில் படிகள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு படிநிலையும் விளக்கப்படுகின்றது. இந்த பட்டியலைப் பார்த்தால் யாருக்கு எந்தப் படி நிலை நரகத்தில் கிடைக்கும் என அறிந்து தம்மை தாமே ன்ப்-ஆம் நம்மை தயார் படுத்திக் கொள்ளலாம் :-)
நான் வாட்டிக்கன் சென்ற போதும் இதனைக் காணவில்லை. பெர்லினின் இந்த அருங்காட்சியகத்திற்கும் இன்னமும் செல்லவில்லை. வாய்ப்பு கிடைத்தால் பார்த்து புகைப்படமெடுத்து பகிர்ந்து கொள்கிறேன்.
சுபா
No comments:
Post a Comment