நேற்று மலேசியாவின் 55ம் ஆண்டு சுதந்திர தினம். இந்த நாளில் மலேசிய தேசிய மலர் என் வீட்டில் பூத்திருப்பதால் இன்றைய என் வீட்டு தோட்டத்துப் பரிசாக இங்கே சிவப்பு நிற செம்பருத்திப் பூ.
சென்ற ஞாயிற்றுக் கிழமை ஒரு மலர் பூத்திருந்தது. இன்று இரண்டு மலர்கள்.
செம்பருத்தி மலர் மலேசியாவில் நாடெங்கிலும் காணக்கிடைப்பது. பல வர்ணங்களில் இது பூத்து அலங்கரித்தாலும் சிவப்பு நிற செம்பருத்திப் பூவே தேசிய மலராக மலேசியாவின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் அவர்களால் தேர்ந்தெடுத்து ப்ரகடனப்படுத்தப்பட்டது. சிவப்பு நிறம் வீரத்தைக் குறிப்பதாகவும் மலரில் உள்ள 5 இதழ்களும் தேசிய கோட்பாடுகள் ஐந்தினைக் குறிப்பதாகவும் குறிக்கப்படுவது.
அன்புடன்
சுபா
இப்பதிவுக்கு கிடைத்த கவிதை.. கவிஞருக்கு நன்றி!
இயற்கை பூவோடு உரையாடினால்...
குளிக்கும் போது நீராவேன்
களிக்கும் போது நகையாவேன்
அளிக்கும் போது வானாவேன்
துளிர்க்கும் போது கதிராவேன்.
நீ ஆனதெல்லாம் ஆகி
என்னையும் எழில்பூவாக்கி
உன்முடியில் எனைச் சூடி
என்மடியில் நீவளர்தல் வியப்பேயம்மா !
--ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
No comments:
Post a Comment