சில நாட்கள் தோட்டத்தை கவனிக்காமல் விட்டால் புற் செடிகள் வளர்ந்து விடுகின்றன. அதிலும் கோடை காலத்தில் வெகு சீக்கிரமாக புற்செடிகள் வளர்ந்து மற்ற செடிகளின் இடைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொள்கின்றன.
இன்று என் சிறிய தோட்டத்தில் மூலையில் வளர்ந்திருந்த ஒரு செடி.. கண்ணை உருத்தவே எடுத்து பிடுங்கிப் போட்டுவிடலாம் என நினைத்துப் பார்த்தால் பூவின் நடுவில் அமர்ந்து தேன் உண்டு கொண்டிருக்கும் வண்டு ஒன்று..
புல் செடியாக இருந்தாலும் அதன் பூ அழகு.. அதிலும் அதன் நடுவே அமர்ந்து தேன் உண்ணும் வண்டு .. இதனைப் பார்த்தவுடன் புல் செடியைப் பிடிங்கிப் போடவா மனம் வரும்..? கேமரா எடுத்து படம் பிடித்து இணைத்திருக்கின்றேன்.
மின் தமிழில் இப்படத்திற்கு கிடைத்த கவிதை..
பூவின்தேன் உண்டாடும் வண்ண வரிவண்டே
நோவின் வலியுண்ணக் கல். - மோகனரங்கன்
பார்க்க.. ரசிக்க..!
சுபா
No comments:
Post a Comment