Sunday, March 9, 2014

என் வீட்டுத் தோட்டத்தில்..!

வசந்த காலம் வந்த குதூகலம் செடிகளுக்கு மட்டுமா? 

இல்லை எங்கள் தோட்டத்திற்கு நிரந்தரமாக வந்து செல்லும் ஆம்சல் பறவைகளுக்கும் தான். 

இன்று காலையில்... முதலில் ஒரு ஆம்சல் மட்டும் வந்தது.. சருகுகளை மேற்பார்வையிட்டு எதனை எடுத்துச் செல்லலாம் என கண்காணிப்பு பணியை தொடங்கியது...

Inline image 1

அடுத்து இன்னொன்று.. அதுவும் இதனோடு சேர்ந்து கொண்டு சருகுகள் தேர்வில் மேற்பார்வை செய்யத் தொடங்கியது..

Inline image 2

இரண்டும் பின்னர் தம் அலகு நிறைய சருகுகளை தூக்கிக் கொண்டு பறந்தன. பக்கத்து வீட்டில் இருக்கும் புதருக்குள் தமது கூட்டை உருவாக்கும் பணியை தொடங்கி விட்டன.

இவர்களின் குடும்ப திட்டமிடுதல் பணி தொடங்கி  விட்டது.. விரைவில் கோடை காலத்தில் சிறு ஆம்சல் குஞ்சுகளின் கீச் கீச் ஒலியை கேட்டு மகிழலாம் :-)

1 comment:

  1. இமேஜ் எங்கே??? முடிந்தால் கருத்துக்களுக்கான வோர்டு வெரிபிகேஷனை நீக்கிவிடுங்கள் கருத்து இட நினைப்பவர்களும் இதனால் கருத்து இடாமல் போய்விடுவார்கள்

    ReplyDelete