வசந்தம் வந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கின்றன என் வீட்டு தோட்டத்துச் செடிகள்..
இப்படியே சீதோஷ்ணம் இருந்தால் நன்று..
இல்லையேல் மீண்டும் குளிர் ஏறினால் செடிகள் அனைத்தும் மண்ணுக்குள் தலையை சுறுக்கிக் கொண்டு ஒளிந்து கொள்ள வேண்டியதுதான்..
முதல் வசந்த கால வரவேற்பாக தோட்டத்து க்ரோக்குஸ் மலர்களின் காட்சி.. இவை நேற்று மதியம் பதிவாக்கப்பட்டவை. நேற்று மதியம் ஸ்டுட்கார்ட்டில் சீதோஷ்ணம் 8 டிகிரி செல்ஸியசாக இருந்தது. சூரிய வெளிச்சம் நன்றாக இருந்தமையால் நன்கு புகைப்படம் எடுக்க முடிந்தது.
என் தோட்டத்தில் இருக்கும் 4 வகை க்ரோக்குஸ் மலர்களின் காலை / மாலை / இரவு வணக்கம்! :-)
சுபா
No comments:
Post a Comment