நீண்ட நாட்களுக்குப் பின் என் தோட்டத்திலிருந்து....
குளிர் காலம்..
இப்போது பனி படர்ந்து குளிரும் போது தோட்டத்தில் செடிகள் மண்னுக்குள் மறைந்து கொண்டுவிட்டன. ஆக தோட்டத்தில் பூத்தொட்டிகளில் சில செடிகள் இருக்கட்டுமே என ப்ரைமல் (Primeln) வகைச் பூச்செடிகளில் சில மாறுபட்ட வர்ணங்களில் மூன்று வாரங்களுக்கு முன் வாங்கி வைத்தேன். வாங்கி நட்டு வைக்கும் போது எனக்கு கொஞ்சம் சங்கடம்..குளிரில் எல்லாம் விரைத்து செத்துப் ஓய்விடுமே என கவலை. ஆனால் இந்த ப்ரைமல் வகைச் செடிகள் குளிரைத் தாங்குபவை என சென்ற ஆண்டு பனிக்காலத்தில் சோதனை செய்த அனுபவம் எனக்கிருந்ததால் வாங்கி வைத்தேன். நன்கு பூக்களோடு தோட்டத்திற்கு வர்ணம் சேர்த்துக் கொண்டிருக்கின்றன.
சில புகைப்படங்கள்...
அதோடு இந்த ஆண்டு சீதோஷ்ணமே வித்தியாசமாக இருக்கிறது. சென்ற ஆண்டெல்லாம் பெப்ரவரி மாதம் -12 டிகிரி செல்ஸியஸ் வரை இப்பகுதியில் இருந்தது. இப்போதோ 3 லிருந்து 11 வரை என இருக்கின்றது. என் தோட்டத்துச் செடிகளும் வசந்த காலம் வந்து விட்டதோ என சில தலையை எட்டிப் பார்க்கின்றன.. :-)
சுபா
No comments:
Post a Comment