Sunday, September 22, 2024

The Silk Road - William Dalrymple

 


நீண்ட காலமாக பட்டுப்பாதை, "The Silk Road" என்ற கருத்தாக்கம் வரலாற்று ஆய்வுலகில் மட்டுமின்றி உலகளாவிய வணிக வரலாற்று ஆய்வுகளிலும் முக்கியத்துவம் பெறுகின்ற ஒன்றாக இருக்கின்றது. இந்தியாவிலிருந்து அனைத்து திசைகளுக்கும் மேற்கொள்ளப்பட்ட வணிக செயல்பாடுகளை மையப்படுத்தி‌ The Golden Road எந்த கருத்தாக்கத்தை முன்வைத்து வெளிவந்திருக்கிறது இப்புதிய நூல். Arul Mervin இந்நூல் பற்றியும் அது தொடர்பான செய்திகள் பற்றியும் எழுதிக் கொண்டிருக்கும் விமர்சனங்களை வாசித்து இந்த நூலை வாங்கி வாசிக்க வேண்டும் என்று ஆர்வம் எழுந்தது. இன்று நூல் வீட்டுக்கு வந்து விட்டது.

நூல் கூறுகின்ற செய்திகளை விரைவாக வாசித்தேன். சீனாவுக்கும் இந்தியாவிற்கும் இடையே இருந்த வணிகம், நிலவழிப்பாதைகள், அரசுகள் மிக முக்கியமாக பௌத்த தொடர்புகளை இந்த நூல் பல்வேறு சான்றுகளுடன் முன்வைக்கின்றது.
எனது விரைவான வாசிப்பில் இந்த நூல் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் தவிர்த்து ஏனைய வணிகப் பகுதிகளைக் கவனிக்கத் தவறி இருப்பதாகவே கருதுகிறேன். நாகப்பட்டினம் கூட சோழப் பேரரசு காலத்து செய்திகளோடு சற்று வருகிறது, ஒரு சில பக்கங்களில். பௌத்தம் செழித்து நிலை பெற்றிருந்த தமிழ் நிலத்தின் ஏனைய வணிகப் பாதைகள் பற்றிய செய்திகள் இதில் குறிப்பிடப்படவில்லை என்று தோன்றுகிறது. நேரம் எடுத்து முழுமையாக நான் வாசித்துப் பார்த்து பிறகு இந்த நூலைப் பற்றிய விமர்சனத்தையும் வழங்குகிறேன்.
நூலை கையில் எடுத்ததுமே உடனே வாசிக்க வேண்டும் என்று ஆர்வத்தை ஏற்படுத்தக் கூடிய பல தலைப்புகள் இந்த நூலில் இடம் பெறுகின்றன. அருமையான, காலத்திற்கேற்ற ஒரு புதிய வரவு.
-சுபா
14.9.2024

No comments:

Post a Comment