Friday, August 4, 2023

அம்பேதக்ரியம் 50

 ஒரு தவம்



'அம்பேதக்ரியம் 50’ தொகுப்புக்களைத் தயாரித்து வெளியிடவேண்டும் என்று தனது நெடுநாள் கனவை என் இணையர் கௌதம சன்னா தொடங்கிய நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் அவரது முயற்சியும் அதற்காக அவர் செலுத்தும் உழைப்பும் கடுமையானது.
குறைவான தூக்கம்.. தொடர்ச்சியான நூல் வாசிப்பு, தொகுப்புப் பணிகள், நூல் வடிவமைப்பு, அட்டைப்பட வடிவமைப்பு .. இதற்கிடையே அம்பேதக்ரியம் கருத்துக்களைக் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்று மக்களை ஒருங்கிணைக்கும் பணி.. இடையில் கடுமையான வயிற்றுப் புண் ஏற்பட்டு தொடர்ச்சியாக மருந்துகளை எடுத்துக் கொண்டிருக்கும் நிலை..
என ஒவ்வொரு நாளும் ஒரே சிந்தனையுடன் ஏறக்குறைய கடந்த 2 ஆண்டுகளாக கௌதம சன்னாவின் வாழ்க்கையின் ஒவ்வொரு நாட்களும் நகர்கின்றன.
இந்தத் தொகுப்பில் அடங்குவன 50 + 2 நூல்கள்.
ஏறக்குறை 22,000 பக்கங்கள். மலைப்பாக இருக்கின்றது!
இன்று மகிழ்ச்சியான ஒரு நாள். அம்பேத்கரியம் தொகுப்புகள் அச்சாகி இன்று வரத்தொடங்கிவிட்டன என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது.
இது அறிவு சார்ந்த ஒரு பணி. கிராமம் தோறும் அம்பேதக்ரின் எழுத்துகளைக் கொண்டு சேர்க்கும் அரும்பணி.
வாழ்த்துகள் சன்னா!
-சுபா
குறிப்பு: அம்பேத்கரியத் தூதுவராக முன்பதிவு செய்து இத்தொகுப்பை ரூ 12,000/- க்கு வாங்க விரும்புபவர்கள் நாளை கும்பகோணத்தில் நடைபெறுகின்ற நிகழ்ச்சியிலும் பதிவு செய்துக் கலந்து கொண்டு நேரடியாக இணையலாம்.. அல்லது தொடர்புக்கு +918072384874 (ஆசிரியர் செந்தில்குமார்)





No comments:

Post a Comment