Saturday, March 2, 2024

முருங்கைக்கீரைகள்

 சென்னையில் சாலிகிராமம் அருகே அருணாச்சலம் சாலையில் பெரியவர் ஒருவர் தினமும் கீரைகள் விற்கின்றார். அவரிடம் முருங்கைக்கீரைகள் வாங்குவது தற்சமயம் எனக்கு வாடிக்கையாக இருக்கின்றது. சென்னையில் இருக்கும் வரை முருங்கைக்கீரைகள் சாப்பிட்டு மகிழ்வோமே என்ற ஓர் ஆசை.



இன்றும் புதிதாக இரண்டு கட்டுகள் காலையில் வாங்கிக் கொண்டேன். எனக்கு முன்னே இன்னொரு பெண்மணி வாங்கிக் கொண்டிருந்தார். ஒரு கட்டு முருங்கைக்கீரை 30 ரூபாய். அந்தப் பெண்மணி பெரியவரிடம் வாதிட்டுக் கொண்டிருந்தார். 15 ரூபாய் தான் ஒரு கட்டுக்கு கொடுப்பேன் என்று. அந்த பெரியவருக்கு தர்ம சங்கடமாக போய்விட்டது.
"நானும் காலையிலிருந்து வேலை செய்கிறேன் எனக்கும் கொஞ்சமாவது காசு கிடைக்கணும் இல்லையா, என்று மன வருத்தத்தோடு அந்த பெண்மணியிடம் வாதிட்டுக் கொண்டிருந்தார். நான் இரண்டு கட்டுகளை எடுத்துக் கொண்டு ஒரு கட்டு முருங்கைக்காயும் எடுத்துக்கொண்டு பணத்தை அவரிடம் கொடுத்துவிட்டு நின்று பார்த்தேன்.
அதனைப் பார்த்த அந்தப் பெண்மணி ஒன்றும் சொல்லாமல் தேவையான பணத்தை கொடுத்து விட்டு நகர்ந்து செல்ல தொடங்கி விட்டார்.
சிறு வியாபாரிகள் தங்கள் வாழ்வாதாரத்தைப் பார்த்துக் கொள்ள செய்கின்ற இத்தகைய வியாபாரத்தில் பேரம் பேசுவது தேவையில்லாதது. இந்த மாதிரியான சாலையோரத்து சிறு வியாபாரிகளிடம் பேரம் பேசுபவர்கள் பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட் அல்லது பெரிய அங்காடிகளில் எந்த கேள்வியும் கேட்காமல் பணத்தைக் கொடுத்து விட்டு வருவது இயல்பாக நடக்கின்றது தானே.. 🙂
-சுபா

No comments:

Post a Comment