உலக தொல்லியல் அகழாய்வுகளில் சிறப்பிடம் பெறுகின்ற அகழாய்வுகளில் ஒன்று எகிப்தின் இளம் ஃபாரோ தூத்தான்காமூனின் ஈமச்சடங்கு கல்லறையும் மம்மியும். தங்க முலாம்பூசப்பட்ட பெட்டியில் தங்கத்தாலான ஏராளமான பரிசுப்பொருட்களுடனும் தேருடனும் தங்கத்தால் போர்த்தப்பட்ட முகமூடியுடன் மம்மியாக்கப்பட்ட தூத்தான்காமூனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டபோது இறந்த சமயத்தில் அவனது முகத்தோற்றம் எவ்வாறு இருந்திருக்கும் எனத் தெரியாமல் இருந்தது.
கம்பியூட்டர் டோமோக்ராஃபி வழி தூத்தான்காமூனின் முகப்பகுதி ஸ்கேன் செய்யப்பட்டு க்ராஃபிக்ஸ் மென்பொருள் தொழில்நுட்பம் வழி தூத்தான்சாமூனின் முகம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டுகள் பல கடந்தாலும் இறந்தவர் முகங்களை அடையாளம் காண தொழில்நுட்பம் இன்று வாய்ப்பளிக்கின்றது.
நன்றி: https://www.archaeology.org/news/11492-230608-tutankhamun-facial-approximation
-சுபா
No comments:
Post a Comment