அழையாத விருந்தாளிகளில் மேலும் ஒருவர்..
வண்ணத்துப்பூச்சி போல காட்சியளித்தாலும் இது வேறொரு வகை. பறவை போல வேகமாகச் சிறகடித்து வந்து தேன் உண்ண வரும் இந்தப் பூச்சியை படம் எடுக்க செய்த முயற்சியில் ஓரளவு வெற்றியே கிடைத்தது.
சென்ற வார இறுதியில் எடுத்த 2 படங்கள்..
வண்ணத்துப்பூச்சி போல காட்சியளித்தாலும் இது வேறொரு வகை. பறவை போல வேகமாகச் சிறகடித்து வந்து தேன் உண்ண வரும் இந்தப் பூச்சியை படம் எடுக்க செய்த முயற்சியில் ஓரளவு வெற்றியே கிடைத்தது.
சென்ற வார இறுதியில் எடுத்த 2 படங்கள்..
சுபா
வண்ணத்தை தேர்ந்தெடுத்து
தீட்டிவைத்தவன் யார்?
அந்த தீற்றலில் உயிர் கொஞ்சம்
ஊற்றி வைத்தவன் யார்?
பச்சை நிறம் அழகு என்று
படித்து வந்தானா?
அதில் இளம்பச்சை
சேர்க்க என்று ரசித்து சென்றானா?
அதற்கென்று சோடி நிறம்
தேர்ந்தெடுத்தானா?
மலர் மையத்தில் பொட்டு வைத்து
அதிசயித்தானா?
விருந்துண்ணா பட்டாம்புச்சிக்கு
அழைப்பு விட்டானா?
விருந்தோம்பல் செய்யவென்று
அருகில் நின்றானா?
தேடுகிறேன் அவ்விடத்தில்
அவன் இல்லையே...!
என் தேகக் கண்பார்வையிலே
படவில்லையே...!
கண்மூடும் போது
உடல் படும் காற்றானான்
கண் திறந்த போது
பதுங்கும் மழலையானான்
நேசத்தை பதுக்கி வைத்தேன்
அவன் மீதினிலே...!
அதை உணர்ந்த அவன்
அருகில் நின்றான் மனத்தேரினிலே...!
உருவம் எங்கே என்று
கேள்வி கேட்டு வைத்தேன்
அதன் இயக்கம் நானே
என்று பதில் நகை புரிந்தான்.
Thamil Selvi
No comments:
Post a Comment