சில நாட்களுக்கு முன்னர் திரு.முத்துராமன் (தென் அமெரிக்கா) தனி மடலில் குறிப்பிட்டிருந்தார். எனது இந்த இழையைப் பார்த்து இன்பெர்னோ வாங்கிப் படித்துக் கொண்டிருப்பதாக. திரு.ப்ரவுனிடம் கொஞ்சம் விற்பனைக்கு கமிஷன் கேட்கலாமா ?? :-)
சரி .. இன்றைக்கு மேலும் ஒரு கட்டிடம் இன்பெர்னோவில் குறிப்பிடப்படுவது. அதனைப் பற்றிய தகவல் பதியலாம் என நினைக்கின்றேன்.
கட்டிடச் சிற்பி லோரென்ஸோ கிபெர்டி (Lorenzo Ghiberti) அமைத்த பாப்டிஸ்ட்ரி.. இது இன்பெர்னோவில் மிக முக்கிய இடம் வகிக்கும் வகையில் விளக்கப்பட்டிருக்கும் ஒரு கட்டிடம். ஒக்டகன் (Octagonal shape) வடிவாக எண்கோண வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு கட்டிடம் இது. இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கட்டிடம் இத்தாலியின் ப்ளோரன்ஸ் நகரின் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டிடம். இன்பெர்னோவின் மைய நாயகன் டாண்டே மட்டுமன்றி, ரெனைஸான்ஸ் பன்பாட்டு மாற்றத்திற்குக் காரணமாக இருந்தோர்களில் குறிப்பிடத்தக்க மெடிசி பாரம்பரியத்தினரும் இந்த வழிபாட்டு மையத்தில் தான் ஞானஸ்தானம் பெற்றுக் கொண்டதாக தகவல்.1058 முதல் 1129 வரை ஏறக்குறைய 70 ஆண்டுகள் தேவைப்பட்டன இந்தக் கட்டிடத்தை முழுமைப் படுத்த!
இந்தக் கட்டிடத்தை வடிவமைத்த கிபெர்ட்டியின் உருவம் இதே கட்டிடத்தில் சொர்க்க வாசல் கதவில் இழைக்கப்பட்டிருக்கின்றது.
உள்ளே நுழைந்தால் சித்திரக் கூடத்தைத் தான் காண்போம். எங்கும் சித்திரங்கள். பைபிள் கதைகள் பலவற்றிற்கு உருவம் கொடுத்து சுவர்கள், மேல் கோபுரப் பகுதி என எல்லா இடங்களிலும் சித்திரங்கள் நிறைந்து நம்மை வியப்பில் ஆழ்த்தும் கலை வடிவம் கொண்டது இந்த பாப்டிஸ்ட்ரி. இங்கே தான் ரோபர்ட்டும் சியன்னாவும் டாண்டேயின் முகமூடியைக் கண்டெடுப்பதாகக் கதை செல்கின்றது.
கட்டிடத்தின் ஒவ்வொரு பகுதியும் சிறப்புத்தான். எண்கோண வடிவத்தில் இருக்கும் இக்கட்டிடத்தைச் சுற்றி சுற்றி வந்து பார்த்தால் பல நூறு சிற்பங்கள், வடிவங்கள் நிறைந்திருக்கின்றன. உள்ளே சித்திரக்கூடம். உலக அதிசயங்களில் இதனையும் ஒன்றாகக் குறிப்பிடலாம். அத்தனை சிறப்புக்கள் இதற்கு உண்டு என்பதை நேரில் பாக்கும் போது உணர்வோம். இந்தச் சிறப்புக்கெல்லாம் சிகரம் வைத்தார் போல அமைவது பாப்டிஸ்டிரியின் உள்ளே மேல் கோபுரச் சுவரில் மையப்பகுதியில் அமைந்திருக்கும் பிரமாண்டமான ஏசு பெருமானின் திரு உருவம்.
இதனைப் பற்றி தனியாக ஒரு பதிவே எழுதலாம். பின்னர் பார்க்கிறேன்.
சுபா

கட்டிடத்தின் வடிவம். நடுவில் மோசைக்கில் வடிக்கப்பட்ட ஏசுவின் திரு உருவம்.

No comments:
Post a Comment