டான் ப்ரவ்னின் புதிய நூல் Inferno வெளிவந்து விட்டது. டான் ப்ரவுன் நூல் விசிறிகளுக்கு இது மேலும் ஒரு பெரிய பரிசாக அமையும்.. டா வின்சி கோட் தொடங்கி ஹார்வெர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ரோபெர்ட் லாங்டன் மேற்கொள்ளும் ஒவ்வொரு பயணமும் ஆய்வுகளும் தேடல்களும் பயங்கர அனுபவங்களும் அவை அனைத்தும் தொடர்பு கொண்டுள்ளதாய் அமையும் சமய பின்புலங்களும் இந்த நாவல்களின் மையமாக அமைந்திருக்கும்.
இம்முறை வெளிவந்திருக்கும் Inferno - 14ம் நூ இலக்கியவாதி Dante கவிதைகளை மையமாகக் கொண்டுள்ளதாகவும் அதற்காக இத்தாலியின் ப்ளோரன்ஸ் மானிலத்தில் பல மாதங்கள் ஆய்விற்கு செலவிட்டு இந்த நூலை எழுதியிருப்பதாகவும் தெரிகின்றது. ப்ளோரன்ஸ் ஒரு மிஸ்டிக்கல் நகரம். இவ்வாண்டு 4 நாட்களை அங்கு நான் செலவு செய்தேன். 11 - 15ம் நூற்றாண்டு வரை இத்தாலிக்கு மட்டுமல்லாது ஐரோப்பிய கத்தோலிக்க மதப்பரப்பலுக்கு மையமாக திகழ்ந்த நகரம் இது. இன்றும் இதன் சிறப்பு ஈடு செய்ய முடியாதது.
நூலைப் பற்றிய மேல் தகவல்களுக்கு...
http://www.danbrownofficial.co.uk/?gclid=CMTexOW2orcCFerHtAodK3wA3A டான் ப்ரவ்னின் அதிகாரப்பூர்வ இணைய பக்கங்களில் ஒன்று.
ஒரு நூலை நேற்று அமேஸோன் பக்கத்தில் வாங்கியிருக்கின்றேன்.
சுபா
No comments:
Post a Comment