இன்று மேலும் ஒரு வசந்த கால செடி வகையின் படத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். என் தோட்டத்தில் சென்ற வார இறுதியில் எடுத்த படங்கள்.
ஐரோப்பாவில் ஜெர்மனி, ஸ்பெயின், போர்த்துக்கல், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் அதிகம் வசந்த காலங்களில் குறிப்பாக ஏப்ரல் மாததில் மலர்ந்து காட்சியளிக்கும் மலர் வகை இது. இந்த மலர், இச்செடி வகை பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்புபவர்கள் விக்கியில் http://en.wikipedia.org/wiki/Narcissus_pseudonarcissus காணலாம்.
டூலிப் மலர்களைப் போலவே இவற்றை வளர்க்க சிறிய வெங்காயங்களை இலையுதிர் கால ஆரம்பத்தில் நட்டு வைக்க வேண்டும். குளிர் காலம் வருவதற்கு முன்னரே செடியின் வெங்காயத்தில் வேர் முளைத்துவிடும். குளிர்காலத்தில் பனிக்குள் எந்த வளர்ச்சியும் இல்லாது இருந்து பின்னர் வசந்த காலத்தில் நன்கு வளர்ந்து பெரிதாகி பூப்பூக்கும்.
மேலும் சில மலர்களுடன் மீண்டும் வருகின்றேன்.
சுபா
No comments:
Post a Comment