என் வீட்டுத் தோட்டத்தின் இன்றைய ஸ்பெஷல்..
ஹோக்கைடோ வகை பறங்கிக்காய்.!!
ஏப்ரல் மாத வாக்கில் ஒரு சிறு கன்று வாங்கி நட்டு வைத்தேன். எப்போது பூ பூக்கும் பூக்கும் என காத்திருந்து முதல் பூ பூத்தபோது அவ்வளவு மகிழ்ச்சி எனக்கு.
அடுத்த சில வாரங்களில், ஜூன் மாத வாக்கில் சில குட்டிக் குட்டிக் காய்கள் தோன்ற ஆரம்பித்தன. ஆனாலும் என்ன காரணம் என்று தெரியவில்லை. காய்கள் பெரிதாவதற்குள் செடியிலிருந்து விழுந்து ஏமாற்றத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தன.
ஜூலை மாத வாக்கில் மேலும் சில காய்கள் தோன்றின. அவற்றில் தங்கியது இரண்டு பறங்கிக் காய்கள் தான். 2 வாரங்களுக்கு முன் என் தோட்டத்து பறங்கிக்காயை அறுவடை செய்து வைத்திருந்தேன். தக்க சமையத்திற்காக அவை காத்திருந்தன.
இன்று எனது மதிய உணவு சமையலுக்கு 2 பறங்கிக்காய்களும்.. சுவை பிரமாதம்.
அன்புடன்
சுபா
பகிர்வுக்கு நன்றி சுபா. தங்களது பறங்கிப் பூ புகைப்படத்தை எனது 'மார்கழி' பதிவுக்குப் பயன்படுத்திக் கொண்டேன்.
ReplyDelete