Saturday, July 16, 2011

தேன் உண்ணும் வண்டு

இயற்கை விரும்பிகளே,

நீங்கள் பார்த்து ரசிக்க என் தோட்டத்து மலர் மட்டுமன்றி இங்கு வந்து செல்லும் வண்டையும் படம் பிடித்து இங்கே இணைத்திருக்கின்றேன். உங்கள் ரசனைக்காக..!



தேன் அருந்துவதற்காக இந்த வண்டு செய்யும் ப்ரயத்தனத்தைப் பாருங்களேன்..!




இப்ப்படங்களுக்கு மின் தமிழ் நண்பர்கள் வழங்கிய கவிதைகள்..

பூவிரிகு ழற்சிகைம ணிப்பறவை போகா
வாவிகொள கிற்புகையுள் விம்மியவ ரொண்கண்
காவியென வூதுவன கைத்தலம் விலங்க
மேவியிவை காந்தளென வீழமிக நொந்தார்
-சூளாமணி:449
இன்னம்பூரான்
16 07 2011

மலரில் தேடும் வண்டே!
நீ தேடுவது தேனையென்பார்.
இல்லை இல்லை
ராஜத்தை யென்பேன் யான்.
-மோகனரங்கன்


வண்டே தேனைத் தேடுவது உன் இயல்பு
பண்டே சிந்தை புகுவது உன் தவிப்பு
சண்டே என்றாலும் சலிக்காமல் பறப்பு
உண்டே களைத்தாலும் சுற்றிவரும் ஈர்ப்பு!
-பவளசங்கரி


என் இனிய வண்டே ...

கவி செய்த மாயமென்னைக்
காற்றில் தாங்கிவந்து
மலைக்காட்சி மடியில் வைத்துக்
கலிக்கொல்லை காணச்செய்து
"ஜெட்-லாகில்" போட்டிருக்கு...

இணைய அன்பு ஈர்க்கிறது
கண்ணசத்தல் பறிக்கிறது
தாள் குவியல் தடுக்கிறது
வருவேன் ஒருநாள் இந்த
மாளிகையின் வாசலுக்கே.
அன்புக்கும் நட்புக்கும் மிக்க நன்றி!
--ராஜம்

1 comment:

  1. மலரும் மணக்கும்
    வாடும் உதிரும்
    தேனைத் தேடி வரும்
    சுயநல தேன் வண்டுகள்
    கால்களில் ரகசியமாய்
    மகரந்தம் பூசி அனுப்பும்
    பூக்களே !

    இருக்கும் இடத்தில்
    இருந்து கொண்டு
    காரியம் சாதிக்கும் - உன்
    மூளை எங்கே தேடுகிறேன்
    இப்போது ..!

    - பெரமு

    ReplyDelete