என் இனிய தோழி கட்டலினாவுக்குத் திருமணம் லியோன்பெர்க் கிராமத்து நகரான்மைக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
ஏறக்குறைய 20 பேர் கலந்து கொண்ட எளிமையான அழகான ஒரு நிகழ்ச்சியாக இது அமைந்தது. கட்டலினாவின் இரண்டு குழந்தைகளும் வளர்ந்தவர்கள். பொறியியலாளராகவும், ரியல் எஸ்டேட் நிபுணராகவும் இருவரும் பணிபுரிகிறார்கள். குழந்தைகளும் அவர்களது வாழ்க்கைத் துணையும் மற்றும் கட்டலினா- ஃபிராங்க் இருவரின் நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்ட நிகழ்வாக இது அமைந்தது.
வாழ்க்கையில் இணையர் இருவரும் தோழர்களாகவும் ஒருவருக்கு ஒருவர் அன்புடனும் பாசத்துடனும் வாழ்க்கை பயணத்தை கொண்டு செல்ல வேண்டும் என்றும், இந்த நிகழ்ச்சியில் திருமணத்தை நிகழ்த்தி வைத்த நகரான்மை கழக அதிகாரி சிறிய உரையை ஆற்றி தம்பதியர் தங்கள் ஒப்புதலை கொடுத்து கையப்பமிட்டு பின்னர் மோதிரங்களை மாற்றிக்கொண்டனர்.
மகிழ்ச்சியான, அதே வேளை எளிமையான திருமணமா
க மதிய உணவு விருந்தோடு இத்திருமண விழா நடைபெற்ற முடிந்தது. நானும் இணையர்களை வாழ்த்தி பரிசளித்து இந்த நிகழ்வில் கலந்து கொண்டேன்.
No comments:
Post a Comment