Friday, February 9, 2024

நியண்டர்தால் மனித இனத்திற்கும் காசநோய் இருந்தது



ஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு நியண்டர்தால், ஒரு நவீன மனிதர் என இரண்டு எலும்புக்கூடுகளின் உயிரியக்கவியல் பகுப்பாய்வு மற்றும் உருவவியல் தொடர்பான ஆய்வுசெய்யபட்டது.  அந்த இருவருக்கும் காசநோய் இருந்ததை இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. நியண்டர்தால்கள் சுமார் 400,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோன ஹோமினின்களின் அழிந்துபோன இனமாகும்.  இந்த மனித இனம் ஹோமோ சேபியன்ஸுடன் நெருங்கிய  தொடர்பு கொண்ட இனமாக அறியப்படுகிறது.


1932ஆம் ஆண்டில் வடக்கு ஹங்கேரியின் சபாலியுக் குகையில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகளின் கரிம ஆய்வு (கார்பன் டேட்டிங்), மத்திய வயது கொண்ட  ஒருவர் சுமார் 37,000 முதல் 38,000 ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததாகவும், மூன்று அல்லது நான்கு வயது குழந்தை ஒன்றின் எலும்பு எச்சங்கள் 33,000 முதல் 34,000 ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததாகவும் தெரியவந்தது. 


Szeged பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் பால்ஃபி (Gyorgy Pálfi) தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், மத்திய வயது கொண்ட நியண்டர்தால் மனிதனின்  முதுகெலும்பு மற்றும் குழந்தையின் மண்டை ஓட்டின் உட்பகுதியில் காசநோய் தொற்றினால் ஏற்படும் எலும்புப் புண்களைக் கண்டறிந்தனர். ஒவ்வொரு எலும்புக்கூடுகளிலிருந்தும் எலும்பு மாதிரிகள் காசநோயை ஏற்படுத்தும் பாக்டீரியாவும் மைக்ரோபாக்டீரியாவும் காசநோய் உள்ளதா என்ற வகையில் சோதிக்கப்பட்டது. கூடுதலாக, ஆராய்ச்சியாளர்கள் ஸ்போலிகோடைப்பிங் (spoligotyping - ஒரு டிஎன்ஏ மாதிரியில் காசநோயின் மரபணு வரிசைகளை அடையாளம் காண பயன்படுத்தப்படுகின்ற முறை) மூலம்  இதனை உறுதிப்படுத்தினர்.   

பைசன் போன்ற பாதிக்கப்பட்ட விலங்குகளை வேட்டையாடுவதும் உண்பதும் போன்றவற்றால் நியாண்டர்தால் மனித இனம் காசநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும், அந்த நோய் அவற்றின் அழிவுக்கு பங்களித்திருக்கலாம் என்றும் பால்ஃபியும் அவரது ஆய்வுக் குழுவினரும் கருதுகின்றனர். 

https://www.livescience.com/archaeology/1st-known-tuberculosis-cases-in-neanderthals-revealed-in-prehistoric-bone-anaylsis


-சுபா

9.2.2024

No comments:

Post a Comment