அண்மையில் நான் பார்த்த தமிழ்ப்படம் பாக்யராஜ்-பூர்ணிமா காதல்ஜோடியின் மகன் சாந்தனு நடித்த முப்பரிணாமம்.
முதல் பகுதியில் இயல்பான செய்திகள் என வளர்ந்து பின்னர் பொதுவான தமிழ்ப்படங்களில் எதிர்பாராத ஒரு திருப்பமாகக் கதை தொடர்வது நல்ல முயற்சி.
தான் காதலிப்பவனை விட புதிதாக சந்திப்பவன் புகழோடும் வசதியோடும் இருக்கின்றான் என காதலில் மனம் மாறும் கதாநாயகி.. பொதுவான தமிழ்ப்பட ட்ரெண்ட்டிலிருந்து மாறுபட்ட கோணத்தில் இருந்தது. இப்படியும் பெண்கள் மனம் மாறுகின்றார்கள் எனக் காட்டுவதில் மிகச் சிறப்பாகச் செய்திருக்கின்றார் இயக்குநர். கதாநாயகியாக நடித்த பெண் அபாரம். அழகு, திறமை என அனைத்தும் சேர்ந்த கலவை.
இறுதிக் காட்சி மனதை உலுக்கும் வகையில் மிக அருமையான நடிப்பில் சாந்தனு மிளிர்கின்றார். நல்ல பட வாய்ப்புகள் கிடைத்தால் மேலும் பல நல்ல படங்களை இவர் நிச்சயம் தருவார் என நம்பிக்கையூட்டும் நடிப்பு.
முன்னரெல்லாம் காதலியை விட்டு பண வசதி படைத்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் நாயகர்களைப் பற்றி அறிந்திருப்போம். இன்று பெண்களிலும் இத்தகையோர் இருப்பது கற்பனையல்ல.
அழகு, சமுதாய மதிப்பு, சாதி, பொருளாதாரப் பின்னனி எனத் தேடிப்பிடித்து காதலிக்கும் இளம் பெண்கள் இருக்கின்றார்கள் என நாம் அவ்வப்போது கேள்விப்படுவதை மனதை தொடும் வகையில் படமாக்கிய இயக்குனருக்கும் இப்படத்தில் மிகச் சிறப்பாக நடிப்பை வழங்கிய நடிகர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்!
-சுபா
-சுபா
No comments:
Post a Comment