Saturday, July 5, 2014

கல்கியில் எமது பேட்டி




அன்பு மின்தமிழர்களே!

சமீபத்தில் சென்று வந்த தமிழகக் களப்பணிப் பயணம் எமது சேவையைத் தமிழகம் உணரும் வகை செய்திருக்கிறது. தமிழகத்தின் முன்னோடி இதழ்களில் ஒன்றான கல்கி, தமிழ் மரபு அறக்கட்டளை அமைப்பு பற்றியும், அதன் தோற்றம், சேவை பற்றியும், எதிர்கால எண்ணங்கள் பற்றியும் தெளிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஊருக்கு நூறு பேர் என்று முதுசொம் காக்கப் புறப்படும் அணி திரளும் காலம் வந்துவிட்டது என்று எண்ணுகிறேன்.

அடுத்த பயணத்தில் எமது சேவைகள் பற்றிய விரிவான நேர்காணல் ஒன்று தேவைப்படுகிறது. கல்லூரியில் பேசும் போதும், தினமணி போன்ற நிகழ்விலும் நம் மின்தமிழர் பங்கேற்பு பற்றிய சேதியை பகிர்ந்து கொள்ள முடிகிறது. பத்திரிக்கையின் இரண்டு பக்கப் பேட்டியில், எப்போதும் போல் ‘அடியைப் புடிடா பாரத பட்டா’ என்று ஆரம்பிக்க வேண்டி இருப்பதால் சமகாலப் பங்களிப்பு பற்றிப் பகிர முடியவில்லை. நண்பர்கள் மன்னிக்க. எம்மை விரிவாகப் பேட்டி காண்போரும் குறைவு. இதற்கென பிரத்யேக விளம்பரப் பயணம் (promotional tour) செய்ய வேண்டும் போலுள்ளது.

எப்படியாயினும் ஊடகத்தின் பார்வையில் நாம் அடிக்கடி தென்படுவது தேர் வடம் பிடிக்க ஆள் சேர்க்க உதவும். நண்பர் மோகனரங்கன் சொல்லும் கதைகளையெல்லாம் கேட்டால் நாம் செய்ய வேண்டிய பணியின் பளு தெரிகிறது. மரபு பற்றிய அக்கறை உள்ளோர் இன்னும் நிறைய, நிறைய வர வேண்டியுள்ளது.

பாரத பூமி பழம் பெரும் பூமி
நீரதன் புதல்வர் நினைவு அகற்றாதீர்!

எனும் பாரதியின் மதுரவாக்கை மீண்டும், மீண்டும் சொல்லிக்கொண்டு, ‘பொலிக! பொலிக! பொலிக! போயிற்று வல்லுயிர் சாபம்!, நலியும் கெடும்!’ என்று அறை கூவிக்கொண்டு தமிழகமெங்கும் பயணம் கொள்ள ஒரு இளைஞர் பட்டாளம் தேவைப்படுகிறது. கல்கி சாதுர்யமாக இக்குறிப்பை இறுதியில் வெளியிட்டுள்ளது. மிக்க நன்றி.

கல்கி கட்டுரையை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறோம்

நா.கண்ணன்
சுபா

1 comment:

  1. வாழ்த்துக்கள். உங்கள் பணியின் மூலமாக உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள் சந்ததியினர்க்கும் பெரிய அங்கிகாரத்தை பெற்று தருகிறிர்கள்.

    ReplyDelete