அண்மையில் ஜெர்மனிக்கு அருகாமையில் இருக்கும் ப்ரென்ச் நகரமான ஸ்ட்ராஸ்புர்க் சென்று வந்தேன். கலைகளுக்குப் புகழ் மிக்க இந்த நகரத்தின் சிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் கலைஞர் ஒருவரும் டாண்டேயின் டிவைன் காமெடி நூலில் உள்ள விஷயங்களுக்குச் சித்திரங்களைப் படைக்கும் பணியைச் செய்திருக்கின்றார். அவரைப் பற்றியும் அவரது ஒரு கலை படைப்பையும் இந்த பதிவில் சொல்கிறேன்.
குஸ்தோவ் டோர (Gustave Doré 1832 - 883) ஒரு ப்ரென்சு சிற்பக் கலைஞர். பால்ஸேக், மில்டன் போன்ற பிரபலமான கலைஞர்களின் படைப்புக்களைச் சித்திரமாக்கும் பணியை மேற்கொண்டவர் இவர். அதில் டாண்டேயின் டிவைன் காமெடி நூலின் காட்சிகளும் அடங்குகின்றன.
இன்ஃபெர்னோவின் முதல் அத்தியாயத்தில் வரும் ஒரு காட்சியை இவர் சித்திரமாக்கியிருக்கின்றார். இந்த ஓவியத்தின் பெயர் Legs. அந்த ஓவியம் கீழே.
டான் ப்ரவுன் இதனை இப்படி தன் நூலில் விவரிக்கின்றார்
When Langdon raised his eyes again to the veiled woman, the bodies at her feet had multiplied. There were hundreds of them now, maybe thousands, some still alive, writhing in agony, dying unthinkable deaths.... consumed by fire, buried in feces, devouring one another. He could hear the mournful cries of human suffering echoing across the water.
...
she pointed now to a writhing pair of legs, which protruded upside down from the earth, apparently belonging to some poor souls who had been buried headfirst to his waist. The man's pale thigh bore a single letter - written in mud - R.
நரகத்தில் கிடைக்கக்கூடிய தண்டனைகளை டாண்டே நன்கு கற்பனை செய்திருக்கின்றார். தலைக்கிழாக புதைத்து வைத்து வதைப்பதும் இவ்வகை நரகக் காட்சிகளின் கற்பனைகளில் அடங்குகின்றன. கற்பனை செய்து பாருங்கள்... இப்படிப் பார்க்கின்ற ஒரு மனிதனின் காலில் ஒரு குறியீடு. அக்குறியீடு எதைச் சொல்ல வருகின்றது என சஸ்பென்ஸ் கலந்த தேடல்.
தேடல் தேடல் தேடல்..
ஓய்வில்லாத தேடல் நிறைந்த வாழ்க்கையில் குறியீடுகளும் மறைபொருள்களும் காட்டி இழுக்கும் சாகஸங்களும் அழைத்துச் செல்லும் பாதையும் என்றுமே சுவாரஸியம் தான்.
ஏறக்குறைய 150 ஆண்டுகளாகிய பின்னரும் கூட குஸ்தோவின் டாண்டெயின் இலக்கியத்துக்கான சித்திரங்கள் புகழ் பெற்று திகழ்கின்றன.
No comments:
Post a Comment