4 பேருக்குத் தேவையான அளவில் மூஸ்லி தயாரிப்பு. இது காலை உணவு வகையில் அடங்கும்.
தேவையான பொருட்கள்:
செய்முறை
அவ்வளவே!
செய்து 30 நிமிடங்கள் வைத்து விட்டு பின்னர் சாப்பிட்டால் சுவை மிக நன்றாக இருக்கும்.
சுபா
- பால் - 1 க்ளாஸ் சூடாக்காத குளிர்ந்த பால்
- தேன் - விரும்பும் அளவு
- ஜேம் - 8 தேக்கரண்டி சிவப்பு/ கருஞ்சிவப்பு நிறத்தில் கிடைக்கும் ஸ்ட்ராபெர்ரி, ப்ளாக்பெர்ரி பழ ஜேம்
- தயிர் - கெட்டியான தயிர்.
- பழம் - உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு பழம் - ஸ்ட்ராபெர்ரி, மாம்பழம் வாழை என எதுவானாலும் பரவாயில்லை.
- மூஸ்லி பாக்கெட் 300க்ராம். - மூஸ்லி கிடைக்கும் என்றே நினைக்கின்றேன். அப்படி கிடைக்கவில்லையென்றால் ஓட்ஸ், கோர்ன்ப்ஃளெக்ஸ், பாதாம், உலர்ந்த பழங்கள் ஆகியவற்றை கலந்தால் மூஸ்லி தயார்.
செய்முறை
- கண்ணாடி பாத்திரம் அல்லது க்ளாஸ் எடுத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் வர்ணங்களின் அழகு நன்கு தெரியும்.
- முதலில் ஒரு தனி பாத்திரத்தில் 8 தேக்கரண்டி ஜேமை எடுத்து தனியாக வையுங்கள். அதனை நன்கு மசித்துக் கொள்ளுங்கள். மசித்த இந்த ஜேமை நான்கு க்ள்ஸ்களுக்குள்ளும் மெதுவாக அளவாக முதலில் இடுங்கள்.
- மற்றொரு பாத்திரத்தில் 300க்ராம் மூஸ்லியை கொட்டி அதில் 1 க்ளாஸ் பாலை சேர்த்து 200க்ராம் தயிரைசேர்த்து கலந்து வையுங்கள். இது ஓரளவு கெட்டியாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் தயிர் மிக மெல்லியதாக இருந்தால் பால் சேர்க்க வேண்டாம். இங்கு கெட்டித் தயிர் கிடைப்பதால் நான் பாலும் சேர்க்கின்றேன்.
- இப்போது ஒரு கரண்டியால் இந்த மூஸ்லிக் கலவையை ஏற்கனவே ஜேம் விட்ட க்ளாஸ்களில் மெதுவாகச் சேருங்கள். க்ளாஸில் பாதிவரும் வரை சேருங்கள்.
- பின்னர் அதன்மேல் ஒரு கரண்டி கெட்டித்தயிரை விடுங்கள்.
- அதன்மேல் உங்களுக்கு பிடித்த அளவு தேனை மெலிதாக ஊற்றுங்கள்.
- அதன்மேல் உங்களுக்குப் பிடித்த ஏதாகினும் ஒரு பழத்துண்டு வைத்து விடுங்கள்.
செய்து 30 நிமிடங்கள் வைத்து விட்டு பின்னர் சாப்பிட்டால் சுவை மிக நன்றாக இருக்கும்.
சுபா
No comments:
Post a Comment