மலேசியாவின் டத்தோ குமரன் அவர்கள் எனக்கு நீண்ட கால தொடர்பில் இருப்பவர். எனது அம்மா சமூக நல நடவடிக்கைகளில் மலேசியாவில் ஈடுபட்டிருந்த சமயம் அம்மாவுக்கு உதவும் வகையில் நான் செல்லும் போது அறிமுகமான VIPக்களில் இவரும் ஒருவர். தமிழாசிரியராக, பின்னர் தலைமை ஆசிரியராக அதன் பின்னர் அரசியல் ஈடுபாடு என வளர்ந்து மலேசிய அரசில் துணை அமைச்சராக தொடர்ச்சியாக சேவையில் இருந்தார். இன்று வரை தொடரும் அவரது தமிழ்ப்பணிகள் பாராட்டுதலுக்குறியவை. பலமுறை வீட்டிற்கு வந்திருக்கின்றார்.
கடந்த சில ஆண்டுகளாக நான் மலேசியா செல்லும் போது எனது உரை நிகழ்ச்சிக்களில் அவர் தலைமை ஏற்கும் பெருமை தரும் நிகழ்வுகள் நடக்கும் போது மனம் பெருமை அடைவதுண்டு. அண்மையில் 10ம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு வந்திருந்தவர் எனது ஆய்வுக் கட்டுரை படைப்பை முழுமையாக கேட்டு பின்னர் கைகளைப் பிடித்துக் கொண்டு பெருமிதத்துடன் பாராட்டினார். என் பெற்றோர் நேரில் இருந்து வாழ்த்துவது போல உணர்ந்தேன். மகிழ்ச்சியான தருணம்.

No comments:
Post a Comment