மார்க்கோ போலோவின் பெயரில் சுற்றுலா நிறுவனங்கள், புத்தகப் பதிப்பகங்கள், உயர் ரக ஆடை ப்ரெண்ட், வணிக நிறுவனங்கங்கள் என... உலகம் முழுவதும் மார்க்கோ போலோவின் பெயர் அறியப்பட்ட பெயர்களுள் ஒன்றாகவே இருக்கின்றது. மார்க்கோ போலோ புகழ்பெற்ற அளவிற்கு அவரை விட அதிக தூரம் தரைமார்க்கமாகவே உலகின் பல நாடுகளுக்குப் பயணம் செய்த இபின் பதூத்தாவைப் பற்றி ஏன் அதிகமாகப் பேசப்படுவதில்லை?
கி.பி.14ம் நூற்றாண்டிலேயே தனது தாயகமான மொரோக்கோவிலிருந்து புறப்பட்டு மெக்கா மதினா என தனது பயணத்தைத் தொடங்கிய இபின் பதுதா தனது தரைமார்க்க பயணத்திலேயே 75,000 மைல்களுக்கு மேல் பயணம் மேற்கொண்டிருக்கின்றார். இவரது பயணத்தில் கண்டம் விட்டு கண்டம் தாண்டி, மத்திய கிழக்கு நாடுகளான சவூதி அரேபியா தொடங்கி ஆப்பிரிக்க நாடுகள், சீனா, இந்தியா, இலங்கை, மலாயா, ஸ்பெயின் என பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார் என்பதை நம்மில் எத்தனை பேர் அறிந்திருப்போம்?
இபின் பதுத்தாவின் பயணக் குறிப்புக்களும் நில வரைப்படங்களும் கடந்த நூற்றாண்டுகளில் பயணங்களை மேற்கொண்டோருக்குப் பயன்பட்ட முக்கிய ஆவணமாக இருந்த போதிலும், அதனை பதிப்பிக்கும் முயற்சிகளும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் முயற்சிகளும் கடந்த நூற்றாண்டு வரை நடைபெறவில்லை. இபின் பதுத்தாவின் பயணக்குறிப்புக்களே இது வரை வெளிவந்துள்ள பயணக்குறிப்பு நூல்களில் மிகப் பெரிய பயணக்குறிப்புத் தொகுப்பு நூல் என்பதும் ஒரு முக்கியச் செய்தி.
நான் நீண்ட நாட்களாக வாசிக்க நினைத்த ஒரு நூல். இன்று வாசித்துக் கொண்டிருக்கின்றேன். பயணங்களை விரும்பும், பயணங்களே வாழ்க்கையின் முக்கியப் பகுதியாக அமைந்திருக்கும் எனக்கு, பிரமிப்பு தரும் ஒரு நூல் இது. நூலில் வருகின்ற குறிப்புகள் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்துகின்றன. நேரம் கிடைக்கும் போது ஒரு விமர்சனம் எழுதுகிறேன்.
-சுபா
-சுபா
No comments:
Post a Comment