சுவையான ஆப்பிள் பை
தேவையான பொருட்கள்:
பரோட்டா செய்வது போல மாவை தயார் செய்து அதனைச் சப்பாத்தி தயார் செய்வது போல சமமாக ஆக்கிவிடுங்கள். கீழுள்ள படத்தில் இருப்பது போல. (நான் கடையில் தயாராகக் கிடைப்பதை வாங்கி பயன்படுத்தினேன்)
ஒரு ஆப்பிளைக் கீழுள்ள படத்தில் உள்ளது போல வெட்டி அதை ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் விட்டு அதனை கொதிக்க வைத்து அதற்குள் போட்டு 2 நிமிட விட்டு எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.
படத்தில் உள்ளது போல பிசைந்த மாவின் ரொட்டி போன்ற பகுதியை 10 செமீ நீளத்திற்கு வெட்டவும்.
அதன் மேல் வரிசை வரிசையாக மேல் பகுதியில் மட்டும் ஆப்பிளை அடுக்கவும். ஆப்பிளுக்கு கீழே பீனட் பட்டரை தடவவும்.
இடையில் சொட்டு சொட்டாக தேனை விடவும்.
இதனை மெலிதாக கீழே படத்தில் உள்ளது போல சுருட்டிக் கொள்ளவும்.
தயாரான ஆப்பிள் பைகளை அவனில் வைக்கும் தட்டில் வைத்து வரிசையாக அடுக்கவும். கொஞ்சம் இடைவெளி விட்டே வைக்கவும். ஏனென்றால் பை பெரிதாக விரியும். இப்போது பையின் மேல் கொஞ்சமாக பட்டை தூளைத் தூவி சில சொட்டுக்கள் தேனையும் அதன் மேல் விடவும்.
அவனில் 20 -30 நிமிடங்கள் வைத்து எடுத்தால் ஆப்பிள் பை ரெடி.
செய்து சாப்பிட்டு மகிழ்க!
- பரோட்டா செய்ய தேவைப்படும் அனைத்தும்
- தேன்
- 1 ஆப்பிள்
- கொஞ்சமாக பட்டை தூள்
- பீனட் பட்டர்

il prepare this and let u know :D
ReplyDelete