மலர்களில் ஆர்க்கிட் செடிகள் என் கவனத்தைப் பெறுபவை. ஆர்க்கிட் மலர்களின் பல வகைகளை மலேசிய வனங்களில் பார்த்திருக்கின்றேன். தற்சமயம் என் வீட்டிலும் இங்கு ஏறக்குறைய் 7 வகை ஆர்க்கிட் மலர்செடிகள் இருக்கின்றன.
சில தினங்களுக்கு முன்னர் கடைக்குச் சென்றிருந்த போது நீல நிறத்தில் ஆர்க்கிட் செடி பூத்திருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு வாங்கி வந்து விட்டேன். ஆனால் வாங்கிய பின்னர்தான் தெரிந்தது இது அடிப்படையில் வெள்ளை நிறத்தில் தான் பூக்கும் என்றும் அதனை நீல மலர்களாக்க விரும்பினால் அதற்கென்று பிரத்தியேகமாக விற்கப்படும் ஒரு ரசாயனப் பொருளை செடியின் வேறில் நீரோடு சேர்ந்து ஊற்றி வர வேண்டும் என்றும்.
எனக்கு இப்படி செய்ய உடன்பாடில்லை. ஆக செடியை அப்படியே வைத்திருக்கின்றேன். இந்த பூக்கள் மலர்ந்து உதிர்ந்ததும் வெள்ளை நிறத்திலேயே வந்தாலும் பரவாயில்லை. இயற்கையாக அதன் இயல்புபடி இருக்கட்டும் இந்த ஆர்க்கிட் என்று தான் மனதிற்கு தோன்றுகின்றது
சுபா

அழகோ அழகு...
ReplyDelete