மலாயா பல்கலைக்கழகத்தில் இன்று 9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு தொடங்குகின்றது. பதிவு செய்ய சற்று முன்னர் சென்றிருந்த போது இந்திய பேராளர்கள், திருச்சி, சென்னை, பல்வேறு பகுதிகளைச் சார்ந்த பல்கலைக்கழக நண்பர்கள் அதிலும் குறிப்பாக அனைவருமே ஃபேஸ் புக் நண்பர்கள் .. அறிமுகம் ஆகிக் கொண்டோம். சிவா பிள்ளையை-லண்டன், கவியரசன்-வட அமெரிக்கா, தவிர ஏனையோரை முதன் முதல் நேரில் காண்கின்றேன்.
பல தமிழக அறிஞர்களைச் சந்தித்தேன். அன்பு ஜெயா, செம்மல், ஆகியோருடனும் மிக அவசரமாக நலம் விசாரித்து விட்டு புறப்படும் நிலை.. முன்னரே அறிமுகமாகியிருந்த பல தமிழக அறிஞர்கள் வந்து அறிமுகம் செய்து கொள்ள நலம் விசாரித்துக் கொண்டோம்.
மாலை கலை நிகழ்ச்சியும் விருந்து நிகழ்ச்சியும் உள்ளது. நேரம் கிடைத்தால் தகவல் பகிர்கிறேன்.
சுபா
No comments:
Post a Comment