Monday, December 8, 2003

Ilayaraja

இளையராஜாவின் பால்நிலாப் பாதை என்ற புத்தகத்தை நேற்று வாசித்துக் கொண்டிருந்தேன். தனது வாழ்க்கை அனுபவங்களை உரைவீச்சாகவும் கட்டுரையாகவும் தந்திருக்கின்றார் இளையராஜா இந்த நூலில். இதற்கு முன்னுரையாக இனிய கவிதைகளாக அமைந்திருக்கின்றன பாரதிராஜவும் கமலஹாசனும் கொடுத்திருக்கும் நட்பு மிகுந்த அனிந்துரைகள்.

எளிமையான எழுத்து. மிகச் சாதரணமாகத் தான் கடந்து வந்த பாதை, இளம் வயது அனுபவங்கள், இசைப்பயணத்தில் கிடைத்த நட்பு, ஆசிரியர்கள், மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் ஆகியவற்றைப் பதிவாக்கியிருக்கின்றார் இந்த நூலில்.

மிகப் பெரிய இசை ஜாம்பவானாக இருந்த போதும் தானும் ஒரு சாதாரண மனிதன் தான் என்பதை, தன்னுடைய எண்ணங்களை, தனது பயத்தை, தனது செயலை எடுத்துச் சொல்வதன் வழி படிக்கின்ற வாசகர்களுக்குக் கொடுத்திருக்கின்றார் இளையராஜா என்று தான் சொல்ல வேண்டும். பல இடங்களில் இவரின் ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடுகளும் புரிந்துணர்வும் வெளிப்படுகின்றன.

படித்து ரசிக்க வேண்டிய ஒரு நூல்தான் இது. அரும்பு பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் இந்த நூலின் விலை ரூ. 75 நூலிலிருந்து சில வரிகள்:

"ஒரு நிகழ்ச்சியில் ஒன்றிப்போய் மகிழ்ந்திருந்தாலோ விலகிப்போய் வருந்தியிருந்தாலோ அதிலிருந்து ஏதோ ஒன்றை நான் கற்றுக் கொண்டிருக்கின்றேன் என்று நம்பலாம்.
எனக்குச் சாதாரணமாகப் படுவது உங்களுக்குக் கற்றுக் கொள்ளும் ஓர் உயர்ந்த விஷயமாகவும்
உங்களுக்குச் சாதாரணமாகத் தோன்றுவது எனக்கு விசேஷ அம்சம் உடையதாகவும் இருக்கலாம். நீங்களும் நானும் கற்பது - நிற்கப்போவதில்லை என்பதே உண்மை. "

No comments:

Post a Comment