Saturday, July 12, 2003

அம்ருதபிந்து உபநிஷத் - பாகம் 1 - மனித, இயந்திர - (எனக்குள் என்னைத் தேடி)




From: "ksuba100"
Date: Sat Jul 12, 2003 10:57 am
Subject: Subject:

சுருக்கம்

1.மனதின் ஆசையை சுத்தம் அசுத்தம் என்று இருவகையாகப் பிரிக்கலாம்.
2.விஷயங்களில் பற்றுகொண்ட மனது பந்தங்களுக்குக் காரணமாகின்றது
3.விஷயத்தில் பற்றில்லாதது முக்திக்குக் காரணமாகின்றது.
4.பரம்பொருள் சிந்திக்கத் தகுந்த ஒரு பொருளேயாகும்.
5.முக்தி என்பது ஒரு நிலை. அது அனுபவித்து விளக்கக் கூடிய ஒரு பொருளல்ல!

குறிப்பு: பிந்து உபநிஷத்துக்கள் 5. அவை நாதபிந்து, ப்ரஹ்மபிந்து, அம்ருதபிந்து, த்யானபிந்து, தேஜோபிந்து ஆகியவையாகும். இவை ஐந்தும் கிருஸ்ஹ்ணயஜுர் வேதத்தைச் சேர்ந்தவை.

[இத்தொடரின் முதற் கட்டுரைகளை http://www.subaonline.de/upani/listti.html என்ற எமது வலைப்பக்கத்தில் காணலாம்]

தொடர் சிந்தனை:

"இறந்த பிறகு நாம் என்ன ஆவோம் என்று எப்போதாவது நீ சிந்தித்திருக்கி ன்றாயா"என்று எனது நண்பன் அலெக்ஸைக் காபி நேரத்தில் ஒரு கேள்வி கேட்டேன். அவனும் ஒரு கணினி பொறியியளாளராகப் பணியாற்றுவதால் டெக்னி கலாகவே பதிலும் இருந்தது. "ஆமாம் சில நேரங்களில் சிந்திப்பதுண்டு. எப்படி நமது செர்வர்கள் shutdown செய்தவுடன் நின்று விடுகின்றனவோ அது மாதிரிதான் இந்த உடம்பும் என்று நினைக்கின்றேன். செர்வர்களைச் shutdown செய்வதற்கு நம்மைப் போன்றவர்கள் தேவை ஆனால் நம்மை shutdown செய்வது எது என்று தெரி யவில்லை. செர்வர்களை shutdown செய்து மறுபடியும் Reboot செய்துவிடலாம். ஆனால் நம்மை Reboot செய்ய முடியாது" என்றான். "டெக்னிகலாகப் பார்த்தால் இந்த உடம்பு, அதோடு இந்த உடம்பில் நாம் இதுவரைக்கும் தேடிச் சேர்த்து வைத்தி ருக்கும் அத்தனை அறிவும் (skills) ஒரே நேரத்தில் இல்லாமல் ஆக்கப்படுகின்றன" என்றான்.

"ஏன் இப்படி சொல்கிறாய்? இவ்வளவு படித்து, முயற்சி செய்து நாம் சேர்த்து வைத்தி ருக்கும் அனுபவம் எல்லாம் ஒரே நொடியில் அழிந்துவிடக்கூடியது என்று சொல்கிறாயே" என்று கேட்க, "இருக்க முடியாது என்று தான் நினைக்கத் தோன்றுகின்றது. இதற்குப் பி றகு உள்ள உலகத்தில் இந்த அறிவு எந்த வகையில் பயன்படும் என்பது தெரியவில்லை. அதுதான் எனக்குக் குழப்பமாக இருக்கின்றது" என்றான். இந்த உடம்பு ஒரு செயலி (hardware). இதில் மென்பொருள் பதியப்படுகின்றது. அந்த மென்பொருள் இந்த செயலி யைப் பயன்படுத்திக் கொண்டு இயங்குகிறது; கற்கிறது; மேலும் மென்பொருளை வளர்ச்சி செய்து கொள்கின்றது. பிறகு ஒரு நாள் இந்த மென்பொருள் செயலியை விட்டு நீங்க, செயலியும் சேர்ந்து இல்லாமல் போய்விடுகின்றது" இப்படித்தான் இருக்க வேண்டும் என்றான்.

உன்னுடைய பதில் இந்த வாழ்க்கையையே பயனில்லாத ஒன்றாகத்தான் காட்டுகின்றது. ஏன் இப்படியும் இருக்கலாம் தானே என்று என்னுடைய கருத்தைக் கூற ஆரம்பித்தேன். 2 செயலிகள்(hardware) இருக்கின்றன; ஒன்று கண்களுக்குத் தெரிகின்ற செயலி; மற்றொன்று கண்களுக்குத் தெரியாத செயலி. கண்களுக்குத் தெரிவது இந்த பூத உடல்; கண்களுக்குத் தெரியாதது இந்தா ஆன்மா (Soul). மென்பொருள் இந்த இரண்டு செயலி களில் கண்களுக்குத் தெரியாமல் இருக்கின்ற செயலியிலேயே பதியப்படுகின்றது. இந்த வாழ்க்கை இருக்கும் வரை மென்பொருள் இயங்குகிறது; வளர்ச்சியடைகின்றது, மேலும் பெரிதானதாக, திறமை வாய்ந்தததாக மாற்றம் காண்கின்றது. இவையெல்லாம் இந்த இரண்டு செயலிகளின் துணையோடு நடக்கக் கூடியவை. கண்ணுக்குத் தெரிகின்ற இந்த செயலியான உடம்பு இறக்கும் போது மென்பொருள் இறப்பதில்லை. மாறாக அது கண்ணுக்குத் தெரியாத செயலியோடே சேர்ந்திருக்கும்; அந்த கண்ணுக்குத் தெரியாத செயலிக்கு ஒரு உடம்பு கிடைக்கும் வரை" என்றேன்.

எத்தனையோ அனுபவங்கள் காரியங்கள் என்று வாழ்க்கையில் பல நிகழ்வுகள் நடந்து கொண்டேயிருக்கின்ற போது ஒரே ஒரு நிமிடம் நம்மை உலுக்கும் கேள்விகள் எழுவதுண்டு. எத்தனை ஆண்டுகள் நாம் இதையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருக்கப்போகின்றோம்? எத்தனை நாள் நாம் இந்த அலுவலகத்தில் இருக்கப்போகி ன்றோம்?; எத்தனை நாள் இந்த வீட்டில், எனது அறையில் எனது நகரில், எனது நாட்டில் எனது இந்த அழகிய உலகில் வாழப்போகின்றோம்? என்று கேள்வி திடீரெறு வந்து குழப்பி விட்டுச் செல்வதை யாராலும் மறுக்க முடியாதுதான். வயதும் வாழ்க்கை அனுபவமும் அதிகமாக இம்மாதிரியான கேள்விகள் மனதில் எழுவதன் எண்ணி க்கையும் அடிகமாகத்தான் செய்கின்றது.

பிறந்தவர்கள் எல்லோரும் சாகத்தான் போகின்றார்கள்; அதற்காக இப்போதே சாவைப்பற்றி நினைத்து புலம்ப வேண்டுமா..? இது சிலரது விவாதம். எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை எப்போதுமே மனிதனைச் சிந்திக்க வைக்கின்றது. 10 வயது குழந்தைக்கு மருத்துவராக வேண்டும் என்பது கனவாகின்றது. "எதிர்காலத்தில் நான் மருத்துவராகத்தான் இருப்பேன்; அதுதான் என்னுடைய ஆசை; அதனால் இப்போதே கணிதம் அறிவியல் பாடங்களை ஆசையோடு படிக்கின்றேன்" என்கிறாள் ஒரு குழந்தை. "இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் கோபுரத்தோடு கூடிய ஒரு ஆலயத்தை இந்த ஸ்டுட்கார்ட் நகரத்தில் அமைத்தே ஆகவேண்டும். எதிர்காலத்தில் நமது தமிழர்களுக்கு ஆன்மீகத்தை ஜெர்மனியில் பரப்ப இந்த ஆலயத்தைக் கட்டுவது முக்கி யமான ஒன்று" என்று தீவிரமாக இறங்கியிருக்கின்றனர் அருகாமையிலுள்ள விநாயகர் ஆலயத்து நிர்வாகத்தினர். இப்படி ஒவ்வொருவருக்கும் எதிர்கால ஆசைகள் மனதை சூழ்ந்தி ருக்கின்றன. மனிதரை அவையே இயக்குகின்றன.

ஒன்றை அடைய வேண்டும் என்று நினைப்பவருக்குத்தான அந்த பொருள் கிட்டும். எதை அடையப் போகின்றோம்? எதை அடைய வேண்டும் என்ற தெளிவி ல்லாதவருக்கு...?????

எது வேண்டும் என்று நினைப்பவருக்குத் தான் தனக்கு வேண்டுவதை அடைவதற்கான தி ட்டங்களைத் தீட்டும் திறம் கிடைக்கும். திட்டங்களைச் செயல்படுத்தினால் தான் மனம் வி ரும்பியதை அடைய முடியும். மிகச் சுலபமான சூத்திரம்.

வேண்டுவது கிடைக்குமா..? நிச்சயம் கிடைக்கும்; போடுகின்ற முயற்சியைப் பொருத்து! "வேண்டத்தக்கது அறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ" - பல ஆண்டுகளுக்கு முன்படித்த இனிய தேவாரப் பாடலின் வாசகம் இன்னமும் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.


"எண்ணிய நான் எண்ணியவாறு எனக்கருளும் தெய்வம் அருட்ஜோதி தெய்வம்" - என்று பாடுகின்றார் வள்ளலார். மனதிற்கு தைரியத்தைச் சேர்க்கும் இனிய வரிகள் இவை.

எதை வேண்டுவது...? வேண்டுகின்ற அப்பொருள் நமக்குக் கிடைக்கும் போது அப்பொருள் தனது கன்மங்களையும் சேர்த்தே கொண்டு வருவதுதான் நியதி. எனக்கு ஒரு கார் வேண்டும். ஆசை ஆசையாய் தேடி எனக்கு பிடித்த மாடலில், எனக்கு பிடித்த வர்ணத்தில் ஏறக்குறைய என்னால் சமாளிக்கக் கூடிய ஒரு காரை வாங்கி னேன். சந்தோஷம். ஆனால் அன்றிலிருந்து செலவு அதிகரிக்க ஆரம்பித்தது. எண்ணை விலை ஏறுகின்ற போதெல்லாம் மனம் தவிக்கின்றது. வாகனத்தை சுத்தம் செய்ய பணம் தேவை, அவ்வப்போது அதனை பழுது பார்க்க பணம் தேவை. எத்தனை செலவுகள்? இது போதாதென்று குளிர்காலங்களில் பணி பெய்யும் போது கார் முழுதும் பணி மூடிவி ட்ட நிலையில் அதனை சுரண்டி சுத்தம் செய்து அலுவலகம் செல்வதற்குள் போதும் போதும் என்ற நிலை. சுத்தம் செய்து முடிப்பதற்குள் குளிரில் கை உறைந்து, நடுங்கும் போது இந்த நிலை தேவை தானா என்று மனது கேட்கின்றது. சில வேலைகளில் தரையெங்கும் பணி கொட்டிக் கிடக்கும் போது நேரத்தைப் பொருட்படுத்தாமல் 40 நிமி டங்கள் நடந்தே அலுவலகம் போக வேண்டிய நிலக்குத் தள்ளப்படுகிறேன்.

சந்தோஷம் என்று நான் நினைத்த ஒன்று ஏன் எனக்கு வெறும் சந்தோஷத்தை மட்டும் தருவதில்லை..?

இப்படி ஒவ்வொரு பொருளாக மனம் ஆசைப்படுகின்றது; ஆசைப்பட்ட பொருள் கிடைக்கி ன்றது அல்லது கிடைக்காமல் போகின்றது. அனுபவம் பெறுகுகின்றது; ஆன்மா வளர்ச்சி அடைகின்றது. இப்போது ஒரு கேள்வி எழுகின்றது? எல்லா பொருளுமே நி றந்தரமற்றதுதானா..? முழுமையான சந்தோஷத்தைத் தரக்கூடிய ஒரு பொருள்(உயிர் இல்லாத/உயிர் உள்ள) இருக்கின்றதா..?

சிந்திக்கத் தகுந்த பொருள் பரம்பொருள்; சிந்திக்கத் தகுந்த பொருள் அப்பரம் பொருள் தருகின்ற ஞானம். அதுவே சிந்திப்பதற்கு உரிய அமிர்தம் என்கின்றது அம்ருதபிந்து உபநிஷத். ஆக கேள்விக்கான பதில்கள் நமக்குள்ளேயே தான் இருக்கின்றன. தேடி கண்டு கொள்வோம்!




ஆசைவலைப் பாசத்து அகப்பட்டு மாயாமல்
ஓசைமணித் தீபத்தில் ஒன்றி நிற்பது எக்காலம்?[47]

தக்கும் வகைக்கு ஓர்பொருளும் சாராமலே நினைவில்
பக்குவம்வந்து உன் அருளைப் பார்த்திருப்பது எக்காலம்? [50]

கருப்படுத்தி என்னை யமன் கைப்பிடித்துக் கொள்ளாமுன்
உருப்படுத்தி ஆள உடன்படுவது எக்காலம்?[24]
[பத்திரகிரியார் - மெய்ஞானப் புலம்பல்]

தொடரும்.....

அன்புடன்
சுபா

1 comment:

  1. Nice to see someone from EU to speak about this "Amritha bindhu upanishad". I am interested to know more. May I request you to kindly enroll me so that I will learn your understanding about this. If it is useful to me, I will be grateful for this.
    With best regards
    Dr, D. Vivekanandan, Ph. D, FAACB (Australia)

    ReplyDelete