Wednesday, January 7, 2015

என் டைரியிலிருந்து.... சில குறிப்புகள்..!

There is nothing on this earth more to be prized than true friendship.
-Thomas Aquinas

மனம் வேதனையில் வருந்தி நிற்கும் போது தோழர்கள்  தரும் ஆறுதல் வார்த்தைகள் மனதின் துயரை மெல்ல தொட்டு அவ்வேதனைகளைs சில நொடிகளேனும் இல்லாமல் போக்கிவிடுகின்றன. உற்றார் உறவினர் என எல்லோரும் காட்டும் அன்பு என்பதன் நிலை ஒரு தன்மையுடயதாய் இருந்த  போதிலும் உண்மையான நட்பு எனும் இந்த தோழமை எனும்  உறவு தருகின்ற மன மகிழ்ச்சியும் ஆறுதலும் உணர்விலே உன்னதமான தன்மையுடையது.

நட்பிலே கூட எத்தனை வகை?
  • சிலர் தங்கள் நலனே பெரிதாக நினைத்து நட்பிலே கூட சுயநலத்தை எதிர்பார்ப்பவர்களாக இருக்கின்றனர்.
  • சிலர் ஏதோ ஒரு காரணத்திற்காக, சுயலாபத்தினை மனதில் கொண்டு நட்போடு இருப்பது போல பாசாங்கு செய்கின்றனர்.
  • சிலர் கொடுக்கல் வாங்கல் போல நட்பினை பாவிக்கின்றனர்.
  • சிலர் ஒத்த கருத்தைச் சொன்னால் நட்புடன் இருப்பேன். இல்லையென்றால் எதிரி பட்டியலில் உடனே உனக்குப் ப்ரமோஷன் என வேறு பகுதிக்குத் தள்ளிவிடுகின்றனர்.
  • சிலர் சில காலம் உன்னத நட்புடன் பழகுவது போல பழகுகின்றனர். பின்னர் உனக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என நட்பு வட்டத்திலிருந்தே கழற்றி தூரப் போட்டு விடுகின்றனர்.
  • சிலர் என்ன சொன்னாலும் எவ்வளவு நாட்கள் பேசாமலிருந்தாலும் கூட நட்பின் தோழமை உணர்வு என்றும் பசுமையோடு இருக்கும் வகையில் அன்பினைப் பொழிகின்றனர்.
  • சிலர் ஒரு சில மணித்துளிகளே சந்தித்திருந்தாலும் நட்பிலே அன்பினைப் பொழிகின்றனர்.
  • சிலர் முகம் காணா நட்பிலே, சில சொற்கள் தருகின்ற அன்பிலும் அரவணைப்பிலும் நிம்மதி பெறுகின்றனர்; மன அமைதியும் மகிழ்வுக் கொள்கின்றனர்.

நல்ல நட்பும் தோழமையும்  கிடைக்கப்பெற்றோர் எப்போதுமே பாக்கியசாலிகள் தாம்!

1 comment:

  1. வணக்கம்!
    இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
    வாழ்த்துக்கள்!
    ஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு!
    திருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்
    பட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது
    படைப்புகள் யாவும்.

    நட்புடன்,
    புதுவை வேலு,
    www.kuzhalinnisai.blogspot.com

    (இன்றைய எனது பதிவு
    "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"
    சிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின்
    குழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம்
    படரட்டும்!
    (குழலின்னிசையை தொடர தாங்கள் உறுப்பினரானால் அகம் மகிழ்வேன்! நன்றி!)

    ReplyDelete