Friday, January 30, 2015

9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - செய்திகள் - 8

9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் தமிழகத்தைப் பிரதிநிதித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் டாக்டர்.ராஜாராம் ஐ.ஏ.எஸ் அவர்கள் வருகை தந்திருந்தார்.

இன்றைய ஒரு அமர்வில் அவரது திருக்குறள் தொடர்பான உரை ஒன்றும் அமைந்திருந்தது. இதற்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் அமர்வுக்கு தலைமையேற்றிருந்தார்.

உரைக்குப் பின்னர் தமிழ் மரபு அற்க்கட்டளை பணிகள் பற்றி டாக்டர்.ராஜாராம் ஐ.ஏ.எஸ் அவர்களுடன் உரையாடினேன். நான் தற்சமயம் செய்து முடித்த ஓலைச்சுவடி தேடும் திட்டம் பற்றி குறிப்பிட்டேன். அத்துடன் தமிழக அரசுடன் இணைந்து ஆரம்பித்திருக்கும் அயலகத்தில் உள்ள அரிய பழம் தமிழ் நூல் மின்னாக்கத் திட்டம் பற்றியும் பேசினேன். தற்சமயம் சில காரணங்களால் முன்னேற்றம் இல்லாமல் இருக்கும் இத்திட்டம் பற்றி கூறினேன். இதனைப் பற்றி பேசி உடன் தொடர்வோம் என ஊக்கமளிக்கும் வகையில் டாக்டர்.ராஜாராம் ஐ.ஏ.எஸ் அவர்கள் நம்பிக்கையளித்தார். பின்னர் தமிழக தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் டாக்டர்.சேகர் அவர்களுடன் கலந்துரையாடினேன்.

படத்தில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் டாக்டர்.சேகர், முன்னாள் செயலர், நான், டாக்டர்.ராஜாராம் ஐ.ஏ.எஸ், டாக்டர்.நா.கண்ணன், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர், திருநெல்வேலி பல்கலைக்கழக பேராசிரியை.



சுபா

No comments:

Post a Comment