Thursday, January 29, 2015

9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - செய்திகள் - 3

இன்றைய நிகழ்வின் தொடக்கத்தில் 2 உரைகள் ஏற்பாடாகியிருந்தன. முதல் சொற்பொழிவை சென்னை பல்கலைக்கழக பேரா.ஜெயதேவன் அவர்கள் வழங்கிய உரை. தமிழின் தேவைகள் என்ற தலைப்பில் மிக அருமையான ஒரு சொற்பொழிவை பேராசிரியர் வழங்கினார்.

பல்வேறு தேவைகளை உலக மொழிகள் பலவற்றினுடனும் ஒப்பிட்டு பேசினார். இது தற்கால நிலையை உடனடி தேவையை விள்க்குவதாக அமைந்தது.

தற்காலத்தில் தமிழ் தொடர்பான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி தொடர்பான விஷயங்களை பேசும் போது எமது தமிழ் மரபு அறக்கட்டளையின் பெயரையும் குறிப்பிட்டு பேசினார். இது மிகுந்த பெருமை அளிப்பதாக இருந்தது.

இவரது உரைக்குப் பிறகு மலேசிய தமிழாசிரியர் ஒருவரது உரையை ஏற்பாட்டுக் குழு ஏற்பாடு செய்திருந்தது. மானாட்டிற்கு சற்றும் பொருத்தமற்ற ஏதோ நகைச்சுவை சொல்லி சிரிக்க வைக்கும் ஒரு முயற்சி போல இந்த பேச்சு அமைந்திருந்தது. இது மிகுந்த ஏமாற்றத்தையே எனக்கு அளித்தது.

உலகத்தரம் வாய்ந்த ஒரு நிகழ்வில் இப்படிப்பட்ட ஒரு சொற்பொழிவை முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகக்ழ்வில் ஏற்பாடு செய்த குழுவினர் மேல் எனது வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் பதிவு செய்கின்றேன்.

தமிழின் தேவைகள் பல இருக்கின்றன. சில பாரதியார் பாடல்களயும், கம்பனின் சில செய்யுட்களையும் புகழேந்தி பாடல்களையும் மனனம் செய்து பேசுவதும், ஃபேஸ்புக் நகைச்சுவைகளை சொல்லி கேட்போர் சிரிப்பதை எதிர்பார்ப்பதும், தற்கால பெண்ணிய முயற்சிகளை குறைத்து மதிப்பிட்டும் பேசி இந்த பேச்சாளர் பெரிய ஏமாற்றத்தையே எனக்கு ஏற்படுத்தினார். 45 நிமிடங்கள் வீணாகியதே என நானும் சில ஆய்வறிஞர்களும் பேசிக் கொண்டோம்.இதில் மேலும் ஒரு ஏமாற்றம் இத்தகைய பேச்சுக்களையும் கேட்டு சிலர் சிரித்து மகிழ்கின்றனரே என்பது தான்.
பேரா.ஜெயதேவனின் பேச்சு மட்டும் கூட இருந்திருக்கலாம் என்றே நினைத்துக் கொண்டேன்.
படத்தில் பேரா.ஜெயதேவன் ..





சுபா

No comments:

Post a Comment