Saturday, January 31, 2015

9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - செய்திகள் - 14

புத்தகக் கண்காட்சி இல்லாத ஒரு தமிழ் கருத்தரங்கா..
இந்த 9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிலும் கடந்த 4 நாட்களாக புத்தகக் கண்காட்சி இடம்பெற்றிருந்தது.

எனக்கு .. என் ரசனைக்கு ஏற்ற நூல்களை காண முடியவில்லை. ஜோதிட நூல்களும் பள்ளிப் பிள்ளைகள் படிக்கும் நூல்களும், சிறுகதை நூல்களும் என நூல்கள் தென்பட்டன.






சுபா

9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - செய்திகள் - 13

தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான இமயம் அவர்களது உரையும் இன்று இடம்பெற்றது. ஆனால் நிகழ்ச்சி பொறுப்பாளராக இருந்த தமிழகத்தின் திரு.அம்பிகாபதி எந்த அக்கறையையும் எடுத்துக் கொண்டு இந்த முக்கிய பேச்சாளரை முழுமையாக இவரது கட்டுரையை வாசிக்க இடமளிக்கவில்லை. 

பல காலகட்டங்களில் தமிழக நாவல்களின் மையக் கருத்தாக அமைந்த விஷயங்களை அலசும் ஒரு ஆய்வாக இவரது பேச்சு அமைந்திருந்தது. ஆயினும் முழுமையாக கேட்கமுடியாத நிலையே ஏற்பட்டது.

மானாட்டிற்கே பொறுத்தமற்ற சில கட்டுரைகளை வாசிக்க வாய்ப்பு இருந்த வேளையில் தகுதியான ஆய்வுகளை முழுமையாக கேட்டு மகிழ முடியாமல் செய்யும் நிலை நடைபெறும் போது அலுப்புத்தான் ஏற்படுகின்றது.


​suba

9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - செய்திகள் - 12

9வது உலகத் தமிழாராய்ச்சி மானாட்டில் சிறப்பு விருந்தினராக வந்திருந்த திராவிடக் கழகத்தின் தலைவர் பெரியவர் வீரமணி அவர்கள் சிறப்பு சொற்பொழிவு அமர்வில் உரையாற்றினார். மிகச் சிற்ப்பானதொரு உரையாக அவரது உரை அமைந்திருந்தது.
  • பெரியார் கொள்கைகள்
  • பன்பாட்டு படையெடுப்பு
  • அயலகத்தில் குறிப்பாக மலேசியாவில் தமிழ் முயற்சிகள்
என இவரது உரை தமிழ் மொழி சார்ந்ததொரு பேச்சாக அமைந்து வந்திருந்தோரைக் கவர்ந்தது.
இவரது பேச்சுக்குப் பின்னர் தொடர்ந்து பேசிய டத்தோஸ்ரீ சாமிவேலு அவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பேசினார். தலைமைத்துவ பண்பின் அவசியம், தலைமைத்துவம் கொண்டிருக்க வேண்டிய பண்புகள் என மிக உணர்ச்சிகரமான ஒரு பேச்சாக அவரது பேச்சு அமைந்த்திருந்தது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு டத்தோஸ்ரீ சாமிவேலு அவர்களின் உணர்ச்சிகரமான பேச்சினைக் கேட்டு மகிழ்ந்தேன்.




9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - செய்திகள் - 11

தேநீர் இடைவேளையின் போது வருகையாளர்கள் மலேசிய பலகாரங்களைச் சுவைக்கின்றனர்.



அமர்வில் பேராளர்கள்...



9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - செய்திகள் - 10

தமிழ் ஆவணப் பாதுகாப்பு - அதன் தேவையும் அவசியமும் என்ற தலைப்பில் இன்று என் அமர்வு நிகழ்ந்தது. 18ம் நூற்றாண்டின் காலின் மெக்கன்சியின் தமிழ் ஆவணத் தொகுப்புக்கள், இச்சேகரிப்புக்கள் இருக்கும் கீழ்த்திசை சுவடியகத்தில் இச்சுவடிகளின் இன்றைய நிலை பற்றி குறிப்பிட்டு பின்னர் 16ம் நூ. தொடங்கி கிருஸ்துவ பாதிரிமார்களின் கையெழுத்துப் பிரதி ஆவணங்கள் பற்றி விளக்கி அவை மின்னாக்க வடிவில் இணையத்தில் அனைவரும் பார்க்கும் வகையில் கிடைப்பதை உறுதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை எனது உரையில் விளக்கினேன். 

அமர்வின் போது எடுத்த புகைப்படங்கள்.




9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - செய்திகள் - 9

இன்று காலை சந்தித்து நண்பர்களாகிப் போன என் தேசத்து மலேசிய தமிழ்ப் பெண்களுடன் நான்.

எனது அமர்வுக்கும் வந்திருந்தனர் இத்தோழியர். மலேசிய தமிழர் வரலாறு, பதிவுகள் என முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என மிகுந்த ஆவலுடன் இருக்கின்றனர்.

மலேசியாவில் பூச்சோங் நகரில் தமிழ்க் கல்விச் சேவையில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்கள் இவர்கள். கல்வியில் நாட்டமில்லாது போகும் தமிழ் மாணவர்களுக்கு ஊக்குவிப்பு தரும் நடவடிக்கைகளைச் செய்து வருகின்றனர்.


Friday, January 30, 2015

9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - செய்திகள் - 8

9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் தமிழகத்தைப் பிரதிநிதித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் டாக்டர்.ராஜாராம் ஐ.ஏ.எஸ் அவர்கள் வருகை தந்திருந்தார்.

இன்றைய ஒரு அமர்வில் அவரது திருக்குறள் தொடர்பான உரை ஒன்றும் அமைந்திருந்தது. இதற்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் அமர்வுக்கு தலைமையேற்றிருந்தார்.

உரைக்குப் பின்னர் தமிழ் மரபு அற்க்கட்டளை பணிகள் பற்றி டாக்டர்.ராஜாராம் ஐ.ஏ.எஸ் அவர்களுடன் உரையாடினேன். நான் தற்சமயம் செய்து முடித்த ஓலைச்சுவடி தேடும் திட்டம் பற்றி குறிப்பிட்டேன். அத்துடன் தமிழக அரசுடன் இணைந்து ஆரம்பித்திருக்கும் அயலகத்தில் உள்ள அரிய பழம் தமிழ் நூல் மின்னாக்கத் திட்டம் பற்றியும் பேசினேன். தற்சமயம் சில காரணங்களால் முன்னேற்றம் இல்லாமல் இருக்கும் இத்திட்டம் பற்றி கூறினேன். இதனைப் பற்றி பேசி உடன் தொடர்வோம் என ஊக்கமளிக்கும் வகையில் டாக்டர்.ராஜாராம் ஐ.ஏ.எஸ் அவர்கள் நம்பிக்கையளித்தார். பின்னர் தமிழக தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் டாக்டர்.சேகர் அவர்களுடன் கலந்துரையாடினேன்.

படத்தில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் டாக்டர்.சேகர், முன்னாள் செயலர், நான், டாக்டர்.ராஜாராம் ஐ.ஏ.எஸ், டாக்டர்.நா.கண்ணன், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர், திருநெல்வேலி பல்கலைக்கழக பேராசிரியை.



சுபா

9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - செய்திகள் - 7

வந்திருந்த பேராளர்களில் சிலர் எங்கெளுக்கென்று ஒரு தனி அமர்வினை ஏற்படுத்திக் கொண்டு பேசி மகிழ்ந்தோம். திருநெல்வேலி சகோதரர் முனைவர் சௌந்தர மகாதேவன், அவரது நண்பர்கள் டாக்டர். ராதா செல்லப்பன், திரு செல்லப்பன், டாக்டர் பானுமதி மேலும் சில நண்பர்கள் இந்த எங்கள்து தனி அமர்வில் பேசி மகிழ்ந்தோம்.
மிக சுவையானதொரு சந்திப்பாக இது அமைந்தது.
சில படங்கள்...




9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - செய்திகள் - 6

இன்று காலை மலாயா பல்கலைக்கழகத்தில் 9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு தொடங்கியது. இன்றும் பல ஃபேஸ்புக் நண்பர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் பலரைச் சந்தித்தேன்.



நாம் தமிழர் கட்சியின் செயலாளர் பெரியவர் இரா.பத்மநாபன்.




மின் தமிழ் நண்பர்கள் - சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக இணைப் பேராசிரியர்கள், டாகடர்.ஜா.இராஜா, டாக்டர்.ப.சு.மூவேந்தன்




முனைவர் பானுமதி.. தமிழ்த்துறைத் தலைவர் வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி

சுபா

9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - செய்திகள் - 5

9வது உலகத் தமிழாரய்ச்சி மாநாட்டின் அதிகாரப்பூர்வ திறப்பு விழா இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. 

பேராளர்கள் அனைவரும் 8 மணிக்கே மண்டபத்திற்குள் வர ஆரம்பித்துவிட்டனர். 

பேராசிரியர் டாக்டர்.மாரிமுத்துவின் வரவேற்புரைக்குப் பின்னர் டத்தோ ஸ்ரீ உத்தாமா சாமிவேலு அவர்கள் தொடக்கவுரை ஆற்றினார். பின்னர் மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ நாஜீப் அவர்கள் பேருரையாற்றி நிகழ்ச்சியைத் திறந்து வைத்தார்.


மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ நாஜீப்


டத்தோ ஸ்ரீ உத்தாமா சாமிவேலு 




பேராசிரியர் டாக்டர்.மாரிமுத்து

சுபா

Thursday, January 29, 2015

9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - செய்திகள் - 4

டாக்டர்.ராதா செல்லப்பன், அவரது கணவருடன் வந்திருந்தார். இவர் கடந்த நூற்றாண்டின் மிக முக்கியமான பதிப்பாசிரியரான பேரா. வையாபுரிப்பிள்ளையின் பேத்தி என்பது தனிச் சிறப்பு. இவர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர்.

கடந்த 15 ஆண்டுகளாக நாங்கள் நாங்கள் நட்பில் இருக்கின்றோம். 2003லும் 2009லும் என்னை திருச்சிக்கு அழைத்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் என்னை சொற்பொழிவாற்ற அழைத்திருந்தார். கடந்த 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கின்றோம். மகிழ்ச்சியான தருணங்களில் இதுவும் ஒன்று....



சுபா

9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - செய்திகள் - 3

இன்றைய நிகழ்வின் தொடக்கத்தில் 2 உரைகள் ஏற்பாடாகியிருந்தன. முதல் சொற்பொழிவை சென்னை பல்கலைக்கழக பேரா.ஜெயதேவன் அவர்கள் வழங்கிய உரை. தமிழின் தேவைகள் என்ற தலைப்பில் மிக அருமையான ஒரு சொற்பொழிவை பேராசிரியர் வழங்கினார்.

பல்வேறு தேவைகளை உலக மொழிகள் பலவற்றினுடனும் ஒப்பிட்டு பேசினார். இது தற்கால நிலையை உடனடி தேவையை விள்க்குவதாக அமைந்தது.

தற்காலத்தில் தமிழ் தொடர்பான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி தொடர்பான விஷயங்களை பேசும் போது எமது தமிழ் மரபு அறக்கட்டளையின் பெயரையும் குறிப்பிட்டு பேசினார். இது மிகுந்த பெருமை அளிப்பதாக இருந்தது.

இவரது உரைக்குப் பிறகு மலேசிய தமிழாசிரியர் ஒருவரது உரையை ஏற்பாட்டுக் குழு ஏற்பாடு செய்திருந்தது. மானாட்டிற்கு சற்றும் பொருத்தமற்ற ஏதோ நகைச்சுவை சொல்லி சிரிக்க வைக்கும் ஒரு முயற்சி போல இந்த பேச்சு அமைந்திருந்தது. இது மிகுந்த ஏமாற்றத்தையே எனக்கு அளித்தது.

உலகத்தரம் வாய்ந்த ஒரு நிகழ்வில் இப்படிப்பட்ட ஒரு சொற்பொழிவை முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகக்ழ்வில் ஏற்பாடு செய்த குழுவினர் மேல் எனது வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் பதிவு செய்கின்றேன்.

தமிழின் தேவைகள் பல இருக்கின்றன. சில பாரதியார் பாடல்களயும், கம்பனின் சில செய்யுட்களையும் புகழேந்தி பாடல்களையும் மனனம் செய்து பேசுவதும், ஃபேஸ்புக் நகைச்சுவைகளை சொல்லி கேட்போர் சிரிப்பதை எதிர்பார்ப்பதும், தற்கால பெண்ணிய முயற்சிகளை குறைத்து மதிப்பிட்டும் பேசி இந்த பேச்சாளர் பெரிய ஏமாற்றத்தையே எனக்கு ஏற்படுத்தினார். 45 நிமிடங்கள் வீணாகியதே என நானும் சில ஆய்வறிஞர்களும் பேசிக் கொண்டோம்.இதில் மேலும் ஒரு ஏமாற்றம் இத்தகைய பேச்சுக்களையும் கேட்டு சிலர் சிரித்து மகிழ்கின்றனரே என்பது தான்.
பேரா.ஜெயதேவனின் பேச்சு மட்டும் கூட இருந்திருக்கலாம் என்றே நினைத்துக் கொண்டேன்.
படத்தில் பேரா.ஜெயதேவன் ..





சுபா