நமது சொந்த நாட்டை விட்டு வெளியே வந்த பிறகு பற்பல சௌகரியங்களை இழந்து விட்டது போன்ற பிரம்மை சில வேளைகளில் தோன்றுகின்றது. சமயலுக்குக் கரிவேப்பிலை வேண்டுமென்றாலும் கூட இலங்கையிலிருந்து வருகின்ற விமானத்திற்காகக் காத்திருக்க வேண்டிய சூழ் நிலை. கரிவேப்பிலை மாத்திரம் இங்கு பிரச்சனை இல்லை. ஒரு புதிய தமிழ் புத்தகம் படிக்க வேண்டும் என நினைத்தால் என்ன செய்ய முடியும்? ஜெர்மனியில் இருக்கின்ற தமிழ் கடைகளிலெல்லாம் சஞ்சிககள் தான் கிடைக்கின்றன. அதிலும், India Today, விகடன், ராணி, துக்ளக் போன்றவை தான் கிடைக்கின்றன. இலக்கிய சஞ்சிகைகளைப் பற்றி கேட்டால் கடை வைத்திருக்கும் தமிழர்கள் நம்மைப் பார்த்துய் பயந்தே ஓட்டி விடுவார்களோ என அச்சப்படும் வகையில் நம்மிடமே சில நேரத்தில் சண்டைக்கு வந்து விடுகின்றனர்.
புதிய வரவுகள், சிந்தனைகளைப் பற்றிய பிரக்ஞயே இல்லாதவர்களாக ஆகிவிடுவோமோ என சில நேரங்களில் எண்ணத்தோன்றுகின்றது. இணையத்தில் வணிகத்திற்கு மிகச் சிறந்த வாய்ப்புக்கள் இருக்கின்ற இக்காலத்தில் தமிழ் புத்தக விற்பனை ஏன் அவ்வளவாக இல்லை என்பது கேள்விக்குறியாகவே தோன்றுகின்றது. வலைப்பக்கங்களைத் தேடும் போது, Amazon.com போல தமிழ் நூல்களுக்கும் இணையத் தளங்கள் இருக்கக்கூடாதா என மனம் ஏங்குகின்றது.
சுலேகா
வலைத்தளத்தில் சுஜாத்தாவின் நாவல்களை வாங்க முடிகின்றது. இதேபோல சில நாட்களுக்கு முன்னர் நா.கண்ணனின் புத்தகத்தைக் கூட மானசராவ் வலைத் தளத்தில் பார்க்க நேர்ந்தது. ஆனால் இப்போது அந்த URL -ஐ கண்டுபிடிப்பது கஷ்டமாக இருக்கின்றது.
நண்பர்களே, உங்களுக்குத் தெரிந்த ஏதாவது Online Tamil Bookshop இருந்தால் எனக்கு அதன் URL -ஐ தெரியப்படுத்துங்கள்.
No comments:
Post a Comment