
ஒரு உண்மையை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். 8 நாட்களுக்கு முன்னர் வரை நான் வைரமுத்துவின் 'புத்தகம்' எதையும் வாசித்ததில்லை.
வைரமுத்துவின் பாடல்களைப், பேச்சுக்களைக் கேட்டதில்லையா என என்னைக் கேட்டு விடாதீர்கள். அவை வேறு; அவரது புத்தகத்தில் உள்ள எழுத்துக்கள் வேறு. இணையம் வழி தேர்வு செய்து வாங்கிய நூற்களில் வைரமுத்துவின் 'சிகரங்களை நோக்கி' என்ற புத்தகமும் ஒன்று. 1992-ல் வெளியிடப்பட்ட நூல் இதுவரை 11 மறுபதிப்புக்களை 2003 வரை கண்டிருக்கின்றது. இந்த விபரமே இவரது எழுத்தின் பிரபல்யத்தை வெளிக்க்காட்டுகின்றது.
வைரமுத்துவின் தனிப்பட்ட கொள்கைகள் எனக்குத் தெரியாது. ஆனால் இந்த ஒரு நூலில் அவர் தன்னை ஓரளவு வெளிப்படுத்த முயற்சிக்கின்றார் என்பது உண்மை. தத்துவ விசாரணையை மனிதர் எளிமையாய் கவிதை வரிகள் மனதில் பதியும் வகையில் படைக்கின்றார். படிக்கும் போது பேனாவை வைத்துக் கொண்டு எனக்குப் பிடித்த வரிகளை நான் கோடிடுவது வழக்கம். அதேபோல கோடிடலாம் என்று முயற்சித்தால் ஒரு பக்கத்திலுள்ள முக்கால்வாசி வரிகளை கோடிட்டே ஆக வேண்டும். பளிச்சென்று ஆழமான தத்துவங்களை எளிமையாக கொடுக்கின்றார். தத்துவம் மட்டும் தான் என்பதல்ல. காதலை விபரிப்பதிலும் அழகு தெரிக்கின்றது.
புத்தகத்தில் பக்கம் 59.
***********************
ஓவியா என்ற அறிவார்ந்த அழகிய பெண்ணை இயற்கைப் பிரியனான கவிஞன் காண்கிறான். அவள் மேல் காதல் வருகின்றது. அவனது உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் அழகு.
'உதடு ஒரு முறை உச்சரித்தாலும் இருதயப் பாறையெங்கும் அவள் பெயர் ஒலித்தது"
"உன்னை மீண்டும் காண்பேனா ஓவியா..? அப்படிச் சந்திக்க முடியாவிட்டால்? இப்படித்தான் விளம்பரம் கொடுக்க வேண்டும். "காணவில்லை! கண்டுபிடியுங்கள்! பெயர்:மின்னல்"
புத்தகத்தை இன்னமும் வாசித்து முடிக்கவில்லை. இன்றைக்கு இரவும் தொடர வேண்டும்.
No comments:
Post a Comment