கண்ணதாசனின் கேள்வி பதில்கள் பகுதியிலிருந்து மேலும் ஒன்று.
[ கே: ஆண்டவன் படைப்பில் உங்களை அதிசயிக்க வைத்தது எது?
பதில்: சிலந்தி கூடு கட்டுவது. எந்த இஞ்சினியரை வேண்டுமானாலும் கூப்பிட்டுக் கேளுங்கள். அவ்வளவு முறையாக எவனுக்கும் கட்டத் தெரியாது. ]
இப்போது கண்ணதாசன் உயிரோடு இருந்திருந்தால் இணையத்தின் வழி நடந்து கொண்டிருக்கும் வலைப்பின்னலைப் பார்த்து தான் அதிசப்பட்டுப் போயிருப்பார் என்று நினைக்கின்றேன்.
அது இருக்கட்டும். இந்த சிலந்தி என்றவுடன் தான் ஒன்று ஞாபகமே வருகிறது. பூச்சிகளைக் கண்டு பலரும் பயப்படுவார்கள் என்பது தெரிந்த செய்திதான். அதிலும் குறிப்பாக என்னை மிக மிக பயமுறுத்திய பூச்சி சிலந்திதான். என்ன காரணம் என்றே தெரியாது. சிலந்திப் பூச்சியைப் பார்த்தாலே எனக்கு உதறல் எடுத்து விடும்; அவ்வளவு பயம். ஆஸ்திரேலியாவில் பல்கலைக்கழகத்தில் மாணவர் விடுதிக்குச் சென்ற முதல் நாள் எங்களுக்குப் பாதுகாப்பு விபரங்களை வழங்குவதற்காக வந்திருந்தவர் எங்களுக்கு இந்தச் சிலந்திப் பூச்சிகளைப் பற்றியும் கொஞ்சம் அதிகமாகவே எச்சரிக்கைக் கொடுத்திருந்தார். ஆஸ்திரேலியாவில் இருக்கும் சிலந்திப் பூச்சிகள் கொடிய விஷம் கொண்டவை. அதனால் அறையில் எப்போதும் ஒரு விதமான மருந்தை தெளிக்க வேண்டும் என்று எச்சரித்திருந்தார்கள். எனது படுக்கையைச் சோதித்த எனக்கும் முதல் நாளே ஒரு சிலந்திப் பூச்சியின் பூத உடல் கிடைக்கத்தான் செய்தது.
No comments:
Post a Comment