Monday, November 3, 2003

மெயிலில் எச்சரிக்கை - கவிதை

ஜெர்மனியில் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்காக வந்திருக்கும் இனிய நண்பர் அமிர்தராஜ் ஒரு நல்ல கவிஞர். தேவாலயத்தில் பாதிரியாராக பொறுப்பேற்றுக் கொண்டே தமிழ் இலக்கியத்தில், குறிப்பாக கவிதைகள் எழுதுவதில் ஈடுபட்டு வருகின்றார். இவரது கவிதகளில் சிலவற்றை எனது தமிழ்வலைப்பக்கத்தில் சேர்த்திருக்கின்றேன்.

http://www.subaonline.de/tamil/kavikaru.html
இங்குள்ள இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்க்கையை அடிப்படியாக வைத்து ஒரு கவிதைத் தொகுப்பாக 20 கவிதைகளை எழுதியிருந்தார். வெளிவராத அந்தத் தொகுப்பில் இருந்து ஒரு கவிதை.

மெயிலில் எச்சரிக்கை
ஆ.அமிர்தராஜ்
Wuerzburg, Germany

தயாராக உள்ள உன்
தங்கச் செயின்
தேவையில்லை
(சே! அடுத்தென்ன
கர்மம்? மேளமா? தாலியா?
தங்கத் தாலியும் வேலியே!)

தலைபோகும்
இக்காதலிட்டும்
என்
நீண்ட கழுத்தின்
அழகை
நகை மாட்டி அலட்டிக்
கெடுக்க மட்டேன்
தங்க இருநாள் கொடு.

வெறும் பூ நகைப்பால் வாட்டி
மயக்கிக்
கெடுப்பேன் உன்னை
(இன்னும் கைப்படாத
ராஜாவா நீ)
சிறு பிராய சிநேகிதியின்
சின்ன சமரசமாய்
காதில் இரு பவளங்கள்
போட்டிருப்பேன். போதுமா?

வந்ததும்
கும்பலில் உன்னை
தேடி நானேப் பிடிப்பேன்.
வெந்து தாமதியாமல்
கண்டதும் கெடுப்பேன்
சூடாய் கடித்து!
முள்ளில்லா ரோஜா வருகிறேன்.
தயாரா?

No comments:

Post a Comment