புதிதாக நான் இணையம் வழி வாங்கியிருந்த புத்தகங்கள் நேற்று வந்து சேர்ந்திருந்தன. (இணைய புத்தகக் கடைகளை அறிமுகப்படுத்திய நண்பர்கள் ராஜு, ரமணி மற்றும் ராஜரத்தினம் ஆகியோருக்கு மிக்க நன்றி) அதில் ஒன்று மிகச் சிறிய நூலான "கண்ணதாசனின் கேள்விகளும் பதிலும்" என்ற நூல். மிகச் சிறிய கையடக்கமான ஒரு நூலாக இருந்ததால் உடனே திறந்து வாசிக்க ஆரம்பித்தேன். பத்திரிக்கைகள் வழியாக கண்ணதாசனிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான பதிலுமாக அமைந்த தொகுப்பு தான் இந்த சிறிய நூல். அதில் ஒரு கேள்விக்கு கண்ணதாசனின் வில்லங்கமான பதில்.
கே: பெண்களையே கவிதை வடிக்கிறீர்களே? எங்கே ஆண்களைப் பற்றி சிறு கவிதை பாடுங்கள்....
பதில்: என்னுடைய மூதாதையரைவிட நான் கெட்டிக்காரன் அல்ல. ஆண் என்பவனே அபத்தம். அவனைப்பற்றிப்
பாடுவதற்கு என்ன இருக்கின்றது?
எப்படி இருக்கின்றது பதில்..??..:-) கண்ணதாசன் நகைச்சுவை உணர்வும் நிறம்பியவராகத் தான் இருந்திருக்க வேண்டும் இல்லையா..?
No comments:
Post a Comment