எத்தனை நாளுக்குத்தான் அலுவலகத்திலேயே உட்கார்ந்து கொண்டிருப்பது? வருடக் கடைசி; கிறிஸ்மஸ் கொண்டாட்டம் என்று எனது குழுவில் அனைவரும் அவர்களைத் தயார்படுத்திக் கொண்டிருக்க நான் ஊரை விட்டே ஓடுவதுதான் நல்லது என்று நினைத்து விமான டிக்கட்டை எடுத்துக் கொண்டு பறந்து விட்டேன். எங்கே என்று கேட்கின்றீர்களா? தென் ரியாவுக்குத்தான்.
ஜெர்மனியில் தான் குளிர் வாட்டுகின்றது என்றால் தென் கொரியத் தலைநகரான சியோலிலும் குளிர் அதிகமாகத்தான் இருக்கின்றது.
குளிர் -3 டிகிரிக்குச் சென்றாலும் சும்மா உட்கார்ந்திருக்க முடியவில்லை. குளிர் ஜேக்கட்டை அணிந்து கொண்டு சியோலை சுற்றிப்பார்க்க கிளம்பி விட்டேன். வருகின்ற நாட்களில் இந்த வலைப்பூவில் எனது சியோல் பயணக் கட்டுரை வெளிவரும், படங்களோடு..:-)
No comments:
Post a Comment